மைதிலி ராவ் | |
---|---|
பிறப்பு | 1943 சிக்கந்தராபாத், ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா |
தொழில் |
|
மொழி | ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு |
தேசியம் | இந்தியர் |
துணைவர் | சியாம் ராவ் (தி. 1967) |
பிள்ளைகள் |
|
மைதிலி ராவ் மும்பையில் உள்ள ஓர் இந்திய நிறுவன சார்பில்லாத திரைப்பட விமர்சரும் எழுத்தாளரும் பத்திரிகையாளரும் முன்னாள் ஆங்கில விரிவுரையாளருமாவார்.[1][2][3]
தி ஹிந்து, பிரண்ட்லைன்[4], பிலிம் கமெண்ட், தி சண்டே அப்சர்வர், ஜென்டில்மேன், தி இன்டிபென்டன்ட், மற்றும் ஸ்கிரீன் உள்ளிட்ட பல தினசரி, மாதாந்திர மற்றும் வாராந்திர வெளியீடுகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற மைதிலி, ஆங்கில விரிவுரையாளராக சிறிது காலம் பணியாற்றியுள்ளார். 1980 ஆம் ஆண்டுகளில் சண்டே அப்சர்வர் என்னும் பத்திரிக்கையில் வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதத் தொடங்கியதே இவரின் முதல் எழுத்துப்பணியாகும்.[5]
மைதிலி, தி ஹிந்து, பிரண்ட்லைன், பிலிம் கமெண்ட், ஜென்டில்மேன், மேன்ஸ் வேர்ல்ட் ஆகியவற்றில் இந்திய, உலகத் திரைப்படங்களைப் பற்றிய பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். சினிமா இன் இந்தியா, மற்றும் தெற்காசிய சினிமா என்ற இவ்விரண்டும் இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மற்றும் லண்டனில் உள்ள தெற்காசிய சினிமா அறக்கட்டளை ஆகியவற்றால் வெளியிடப்பட்ட இவரின் கட்டுரைத்தொகுப்புகளாகும்.[6][7]
ஈவ்ஸ் வீக்லி என்ற பத்திரிக்கையில் பத்து வருடங்களாக, "இந்திய சினிமாவில் பெண்களின் பிம்பங்கள்" என்ற கட்டுரையை எழுதியுள்ளார். அத்தோடுசண்டே அப்சர்வர், தி இன்டிபென்டன்ட், ஸ்கிரீன், தி பிரீ பிரஸ் ஜர்னல், பாம்பே மற்றும் ஜீ பிரீமியர் ஆகியவற்றிலும் பல்வேறு திரைப்படங்களை விமர்சித்தும் பாராட்டியும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.[8]
2003 ஆம் ஆண்டில், பாப்புலர் பிரகாஷனால் வெளியிடப்பட்ட இந்தி சினிமா பற்றிய கலைக்களஞ்சிய புத்தகமான இந்தி சினிமாவின் என்சைக்ளோபீடியாவில் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
தங்க யானை கோல்டன் எலிஃபென்ட் (சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா இந்தியா என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் மும்பை சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் நடுவராக பங்களித்துள்ள மைதிலி,[9] ஹார்பர்காலின்ஸ் வெளியீட்டு நிறுவனம் மூலமாக, இந்திய நடிகை ஸ்மிதா பாட்டீலின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான ஸ்மிதா பாட்டீல்: எ பிஃப் இன்காண்டெசென்ஸ் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். 2015 ஆம் ஆண்டு இது வெளியிடப்பட்டது.
இந்தோ-ஆசிய செய்திச் சேவையின்படி, "இந்தப் புத்தகம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வெளியானாலும் இந்த திறமையான ஆனால் உள்ளார்ந்த நடிகையின் காரணமாக மட்டுமல்லாமல், இந்திய சினிமாவின் மிகச் சிறந்த சிலவற்றின் விலைமதிப்பற்ற வடிகட்டுதலாகவும் உள்ளது, இது எளிதில் உணர்ச்சிவசப்படாமல் சித்தரிக்கப்படும். சமூகம் மற்றும் அதன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அநீதிகள்-குறிப்பாக பெண்களிடம், அவர்களின் அவலநிலையை ஸ்மிதாவின் வாழ்க்கை வழியாக மிகவும் தொட்டுணர முடியும்." என்று விமர்சித்துள்ளது. மேலும் டைம்ஸ் ஆஃப் இந்தியா இப்புத்தகத்தை 2015 ஆம் ஆண்டின் "சிறந்த 25 நல்ல வாசிப்புகளில் ஒன்று" என பட்டியலிட்டுள்ளது.
இவரது இரண்டாவது புத்தகமான தி மில்லினியல் வுமன் இன் பாலிவுட் என்பதனை மும்பையில் வைத்து இந்திய நடிகையான வித்யாபாலனால் வெளியிடப்பட்டது.