மொகுபாய் குர்திகர் | |
---|---|
இயற்பெயர் | மொகுபாய் குர்திகர் |
பிறப்பு | 15 சூலை 1904 |
பிறப்பிடம் | குர்தி, கோவா (மாநிலம்) |
இறப்பு | 10 பெப்ரவரி 2001 | (அகவை 96)
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) | குரலிசை |
மொகுபாய் குர்திகர் (Mogubai Kurdikar) (15 சூலை 1904 - 10 பிப்ரவரி 2001) ஜெய்ப்பூர்-அட்ரௌலி கரானாவின் (பள்ளி) புகழ்பெற்ற இந்துஸ்தானிய பாடகராவார். [1]
அப்போதைய போர்த்துகீசிய கோவாவில் உள்ள குர்தி கிராமத்தில் பிறந்தார். [2] 1913ஆம் ஆண்டில், இவருக்கு பத்து வயதாக இருந்தபோது, இவரது தாயார் ஜெயசிறீ, சாம்பௌலிமில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று, இவருக்கு சிறிது காலம் இசை கற்பிக்க ஏற்பாடு செய்தார். பின்னர் ஒரு பயண நாடக நிறுவனமான சந்திரேசுவர் பூத்நாத் சங்க மண்டலத்திற்கு அழைத்துச் சென்றார். மேலும் அந்த நிறுவனம் இவரை ஒரு நடிகையாக அழைத்துச் சென்றது.
மோகு சந்திரேசுவர் பூத்நாத் மண்டலியுடன் இருந்தபோது, இவரது தாயார் 1914 இல் இறந்தார். [3] விரைவில் நாடக நிறுவனம் மூடப்பட்டது. போட்டி நிறுவனமான சத்தர்கர் இசை மண்டலி இவரை பணிக்கு அமர்த்தியது. கிங்கினி, புண்யபிரவ், சுபத்ரா போன்ற நாடகங்களில் பாராட்டத்தக்க வகையில் நடித்தார். அங்கு இவருக்கு சிந்தோபுவா குராவ் இசைப் பாடங்களை வழங்கினார். அதே நேரத்தில், இராம்லால் என்பவரிடமிருந்து கதக்க்கில் பயிற்சி பெற்றார். [4] [5] இவருக்கு கசலில் தத்தராம்ஜி நனோத்கர் மூலம் பயிறி கிடைத்தது. பின்னர், இவருக்கும் நடக நிறுவனத்தின் மூத்த பெண்களில் ஒருவருக்குமிடையே ஒரு மோதல் எழுந்தது. இதனால், அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பின்னர், இவரது முயற்சிகள் கைகூடவில்ல. இதனால் உடல்நிலையையும் பாதித்தது. 1919 ஆம் ஆண்டில், இவரை இவரது அத்தை [3] மருத்துவ சிகிச்சைக்காக சாங்கலிக்கு அழைத்துச் சென்றார். [6] சாங்கலிக்கு வருகை இவரது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்தது. அங்கு இனாயத் கானின் கீழ் சிறிது காலம் இசையைக் கற்றுக்கொண்டார்.
இவர், 2001 பிப்ரவரி 10 அன்று இறந்தார்.
இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டன அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:
கன் தபஸ்வினி மொகுபாய் குர்திகர் விருது இசை விழாவில் வழங்கப்படுகிறது. [7]
இவரது சொந்த மாநிலமான கோவாவில், மட்காவ் நகரத்தின் சுரமாஞ்ச் நிறுவனம் இவரது நினைவாக ஆண்டுதோறும் கான் தபஸ்வினி மொகுபாய் குர்திகர் சுமிருதி சங்கீத மாநாட்டினை ஏற்பாடு செய்தது. [8] [9]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)