மொதெரா (Modhera) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வடக்கில் மெக்சனா மாவட்டத்தில் உள்ள சிறு நகரம் ஆகும். இங்கு சாளுக்கியர் காலத்திய புகழ்பெற்ற மொதெரா சூரியன் கோயில் மற்றும் படிக்கிணறு உள்ளது.[1][2][3] உள்ளது. இது புஷ்வதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[3][3]இவ்வூரில் 16-17ஆம் நூற்றாண்டின் படிக்கிணறு அமைந்துள்ளது.[4]
இந்தியாவின் முதல் சோலார் கிராமம் என்ற பெருமையை மோதிரா கிராமம் பெற்றுள்ளது. வீட்டின் கூரைகளெங்கும் சூரிய தகடுகளாக காட்சியக்கும் இந்த கிராமத்தின் மக்கள், முழுக்க முழுக்க சூரிய மின்சக்தியை 24 மணி நேரமும் பயன்படுத்துகின்றனர். சூரிய கோவிலுக்கு புகழ்பெற்ற இந்த கிராமம் இப்போது சூரிய மின்சக்திக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது.
மண்பாண்டத் தொழில், தையல் தொழில் மற்றும் விவசாயம் செய்யும் 6500 குடும்பங்கள் கொண்ட இந்த கிராமத்தில் எல்லாம் இயந்திரத்தில் இயங்குகிறது. பகலில் மின்தகடுகள் வழங்கும் மின்சக்தி வீடுகளில் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது. பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரம் இரவில் பயன்படுத்த வழி செய்யப்பட்டுள்ளது.[5]