மொனராகலை இலங்கைத் தேர்தல் மாவட்டம் | |
மாகாணம் | ஊவா மாகாணம், இலங்கை |
நிருவாக மாவட்டங்கள் |
மொனராகலை |
தேர்தல் தொகுதிகள் |
3 |
வாக்காளர்கள் | 300,642[1] (2010) |
மக்கள்தொகை | 430,000[2] (2008) |
பரப்பளவு | 5,639 கிமீ2[3] |
உறுப்பினர்களின் எண்ணிக்கை |
5 |
உறுப்பினர்கள் | விஜித பேருகொடை, ஐமசுகூ எம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார, ஐதேமு சுமேதா ஜயசேன, ஐமசுகூ ஏ. பி. ஜகத் புஸ்பகுமார, ஐமசுகூ காமினி சொய்சா, ஐமசுகூ |
மொனராகலை தேர்தல் மாவட்டம் (Monaragala Electoral District) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் ஊவா மாகாணத்தின் மொனராகலை நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் 300,642 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்[1].
மொனராகலை தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:
2010 ஏப்ரல் 8 இல் நடைபெற்ற 14வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:
கட்சி | தொகுதி வாரியாக வாக்குகள் | அஞ்சல் வாக்குகள் |
மொத்த வாக்குகள் | % | இடங்கள் | |||
---|---|---|---|---|---|---|---|---|
பிபிலை | மொனரா -கலை |
வெல்ல -வாயா | ||||||
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (சுக உட்பட) | 28,575 | 32,315 | 50,073 | 9,671 | 120,634 | 75.64% | 4 | |
ஐக்கிய தேசிய முன்னணி (ஐதேக, முகா, ஜமமு, சுக(பி)) |
6,172 | 8,500 | 12,199 | 2,021 | 28,892 | 18.12% | 1 | |
சனநாயகத் தேசியக் கூட்டணி (ஜேவிபி உட்பட) | 1,610 | 2,168 | 4,507 | 733 | 9,018 | 5.65% | 0 | |
நமது தேசிய முன்னணி | 61 | 74 | 126 | 14 | 275 | 0.17% | 0 | |
சிறீ லங்கா தேசிய முன்னனி | 18 | 65 | 41 | 12 | 136 | 0.09% | 0 | |
சுயேட்சை 4 | 16 | 23 | 29 | 0 | 68 | 0.04% | 0 | |
தேசிய அபிவிருத்தி முன்னணி | 18 | 23 | 24 | 1 | 66 | 0.04% | 0 | |
சுயேட்சை 2 | 13 | 26 | 20 | 5 | 64 | 0.04% | 0 | |
ஐக்கிய சோசலிசக் கட்சி | 10 | 28 | 22 | 0 | 60 | 0.04% | 0 | |
ஜனசெத்த பெரமுனை | 13 | 31 | 10 | 4 | 58 | 0.04% | 0 | |
ஐக்கிய தேசிய மாற்று முன்னணி | 17 | 18 | 19 | 3 | 57 | 0.04% | 0 | |
சுயேட்சை 3 | 8 | 19 | 12 | 1 | 40 | 0.03% | 0 | |
சுயேட்சை 1 | 7 | 9 | 16 | 0 | 32 | 0.02% | 0 | |
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி | 9 | 6 | 12 | 2 | 29 | 0.02% | 0 | |
ஐக்கிய சனநாயக முன்னணி | 4 | 7 | 13 | 5 | 29 | 0.02% | 0 | |
ருகுண மக்கள் கட்சி | 7 | 5 | 0 | 0 | 12 | 0.01% | 0 | |
இடது விடுதலை முன்னணி | 3 | 7 | 1 | 0 | 11 | 0.01% | 0 | |
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி | 2 | 3 | 3 | 2 | 10 | 0.01% | 0 | |
செல்லுபடியான வாக்குகள் | 36,563 | 43,327 | 67,127 | 12,474 | 159,491 | 100.00% | 5 | |
நிராகரிக்கப்பட்டவை | 2,837 | 3,112 | 3,694 | 506 | 10,149 | |||
மொத்த வாக்குகள் | 39,400 | 46,439 | 70,821 | 12,980 | 169,640 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 74,692 | 96,386 | 129,564 | 300,642 | ||||
வாக்குவீதம் | 52.75% | 48.18% | 54.66% | 56.43% | ||||
மூலம்:[4] |
பின்வருவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:[5] ஏ. பி. ஜகத் புஸ்பகுமார (ஐமசுகூ-சுக), 67,903 விருப்பு வாக்குகள்; காமினி விஜித் விஜயமுனி சொய்சா (ஐமசுகூ), 54,516; சுமேதா ஜயசேன (ஐமசுகூ-சுக), 45,837; ஆராச்சிகே விஜித்த பேருகொட (ஐமசுகூ), 43,001; எம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார (ஐதேக), 15,105.