மொன் தேசிய விடுதலைப் படைகள் | |
---|---|
கொடி | |
செயல்பாட்டுக் காலம் | சூலை 1958 | – தற்போது வரை
செயல்பாட்டுப் பகுதி(கள்) | மொன் மாநிலம் தாநின்தாரி பிரதேசம்[1] |
சித்தாந்தம் | மொன் தேசியம் கூட்டாட்சி முறை |
அளவு | 1500+ |
தலைமையகம் | யீ சௌங் பியா, மொன் மாநிலம் |
எதிரிகள் |
|
யுத்தங்கள் மற்றும் போர்கள் | மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை) |
மொன் தேசிய விடுதலைப் படைகள் (Mon National Liberation Army (சுருக்கமாக:MNLA), மியான்மர் நாட்டின் தெற்கில் உள்ள மொன் மாநிலம் மற்றும் தாநின்தாரி பிரதேசத்தின் தன்னாட்சிக்காக, மியான்மர் இராணுவத்தை எதிர்த்து 1949 முதல் போரிடும் ஒரு ஆயுதக் குழுவாகும்.[2]இதன் அரசியல் கட்சி புதிய மொன் மாநிலக் கட்சி ஆகும்.
புதிய மொன் மாநிலக் கட்சியின் ஆயுதக் குழுவாக மொன் தேசிய விடுதலைப் படைகள் 19 ஆகஸ்டு 1971 அன்று நிறுவப்பட்டது. 2021 மியான்மர் உள்நாட்டுப் போருக்குப் பின் 14 பிப்ரவரி 2024 அன்று புதிய மொன் மாநிலக் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள், மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிரான புதிய மொன் மாநிலக் கட்சியை நிறுவினர்.[3]
மொன் தேசிய விடுதலைப் படைகள் மியான்மரின் மொன் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.