மொழி இடைமுகப் பொதி அல்லது மொழி இடைமுகத் தயாரிப்பானது (Language Interface Pack) பயனர்களிற்கான ஒரு மொழி இடைமுகமாகும். இவை வர்த்தகரீதியாக பாவனையாளர்கள் குறைந்த இடத்தில் அந்நாட்டு அல்லது அப்பிரதேச மொழிகளில் பிறிதோர் மொழியைக் கொண்டு ஏறத்தாழ 80% வீதமான இடைமுகமானது அவர்களின் தாய் மொழியிலேயே அமைந்திருக்கும் தமிழ் மற்றும் ஏனைய இந்திய மொழிகளின் இடைமுகமானது ஆங்கில மொழியைப் பின்பற்றியே அமைந்துள்ளது.
மைக்ரோசாப்ட் இருவேறு மொழி இடைமுகப் பொதிகளை வெளியிட்டுள்ளது
வின்டோஸ் மொழி இடைமுகப் பொதியானது வின்டோஸ் இயங்குதளத்தின் பயனர் இடைமுகப்பின் மொழியை மாற்றிக்கொள்வதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினால் உருவாக்கி வெளியிடப்படும் மென்பொருளாகும். இது வின்டோஸ் எக்ஸ் பீ பதிப்பிற்கு மட்டுமே ஆதரவு வழங்குகிறது. ஏற்கனவே வெவ்வேறு மொழிகளுக்கென மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது வின்டோஸ் இயங்குதளத்தின் தனித்தனி பதிப்புக்களை வெளியிட்டு வருகிறது. இவ்வாறு தனிப்பதிப்புகளில் இடம்பெறாத மொழிகளை இடைமுகப்பில் இடம்பெறச்செய்வதற்கான தொழிநுட்பமாகவே LIPS எனப்படு மொழி இடைமுகப் பொதியை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது தமிழ் உட்பட பல மொழிகளில் இப்பொதி வெளியிடப்பட்டுள்ளது. இவற்றைப் பதிவிறக்கம் செய்யும் போதும் நிறுவும் போதும் போலியில்லாத வின்டோஸ் என்பதை இம் மென்பொருளானது நிச்சயம் செய்த பின்னரே நிறுவிக்கொள்ளும்.
இந்திய மொழிகளில் வெளியாகும் எல்லாப் பயனர் மொழி இடைமுகங்களும் ஆங்கிலத்தையே ஆதாரமாக் கொண்டுள்ளன
மைக்ரோசாஃப்ட் தகவலிறக்க மையம் கணினியை போலியல்லாத விண்டோஸ் நிறுவல் (WGA) என உறுதிப்படுத்திய பின்னரே இந்த மென்மொருளை தகவலிறக்கம் செய்வதற்கான சுட்டியை வலைப்பக்கத்தில் அளிக்கும். எனவே கொள்கைரீதியாக அசல் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பதிப்பை வைத்துள்ளவர்கள் அல்லாமல் வேறு ஒருவரும் இதை தகவலிறக்கம் செய்ய இயலாது என்றாலும் ஏற்கனவே பதிவிறக்கபப்ட்ட மென்பொருளை நிறுவ இயலும் தவிர விண்டோஸ் சோதனைப் பதிப்புக்களைப் பயன்படுத்துபவர்களும் இதைப் பதிவிறக்கம் செய்யலாம்.
மொழி இடைமுகப்பு பொதிகளை உருவாக்குவதற்கான கலைச்சொற்களும் இடைமுகப்பு சொற்களும் மைக்ரோசொஃப்ட் சமுதாய கலைச்சொல்லாக்கத்திட்டத்தின் மூலம் பெறப்படுகின்றன. இத்திட்டத்திற்கு பங்களிப்பவர்களுக்கு இந்நிறுவனம் எந்த விதமான ஊதியமும் வழங்குவதில்லை. அனைத்து பங்களிப்பாளர்களும் தன்னார்வலர்களே.
மொழி இடைமுகப்பு பொதியானது எப்போதும் இலவசமாகவே வழங்கப்படும் என சமுதாய கலைச்சொல்லாக்கதிட்டத்தின் ஒப்பந்தத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உறுதியளிக்கிறது. எவ்வாறாயினும் இயங்குதளத்தை பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ள வேண்டும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சந்தைத் தேவைகளுக்காக இத்திட்டம் மூலம் சமுதாய உழைப்பை சுரண்டுகிறது என்றவாறான எதிர்நிலை விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
தமிழ் வின்டோஸ் எக்ஸ்பி மொழி இடைமுகப் பொதியை நிறுவலானது இடைமுகங்களை நிறுவுவதைப் போன்றதே. முதலில் இதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 4.36MB அளவான இக்கோப்பின் பெயர் LIPSetup.msi ஆகும். ஏனைய மொழிகளுக்கானதும் இதே கோப்புப் பெயருடன் இருக்கும் எனினும் கோப்பின் அளவு மொழிகளிற்கு ஏற்ப மாறுபடும்.
ஆபிஸ் மொழி இடைமுகப் பொதியானது மைக்ரோசாப்ட் ஆபிஸ் அலுவலக மென்பொருளின் பயனர் இடைமுகப்பின் மொழியை மாற்றிக்கொள்வதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினால் உருவாக்கி வெளியிடப்படும் மென்பொருளாகும்.