மோகனா ஆறு Mohana River மோகனி ஆறு, மோகனே ஆறு | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சார்க்கண்டு, பீகார் |
நகரம் | இட்கோரி |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | போராம்பேபகார் |
⁃ அமைவு | அசாரிபாக்கு மாவட்டம் |
முகத்துவாரம் | பால்கு ஆறு |
⁃ அமைவு | கயா மாவட்டம் |
⁃ ஆள்கூறுகள் | 24°43′41″N 85°00′47″E / 24.72806°N 85.01306°E |
மோகனா ஆறு (Mohana River) இந்திய மாநிலங்களான சார்க்கண்ட் மற்றும் பீகாரில் உள்ள அசாரிபாக், சத்ரா மற்றும் கயா மாவட்டங்கள் வழியாக பாய்கிறது. மோகனி ஆறு என்றும் மோகனே ஆறு என்றும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
மோகனா ஆறு பெந்தி கிராமத்திற்கு அருகிலுள்ள அசாரிபாக் பீடபூமியில் உள்ள கோரம்பே பகாரில் உற்பத்தியாகிறது. பெந்தி கிராமம் அசாரிபாக்கு நகரத்திலிருந்து 19.3 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.[1] [2] பீடபூமியின் மேல் பகுதியில் மோகனா ஆறு பாய்கிறது.[3] தெற்கில் உள்ள தாமோதர் வடிநிலம், நிரஞ்சனா என்று அழைக்கப்படும் லிலாயன் மற்றும் வடக்கே மோகனா ஆறு ஆகியவற்றுக்கு இடையே ஒரு பரந்த நீர்த்தேக்கத்தை அசாரிபாக் பீடபூமியின் மேற்குப் பகுதி உருவாக்குகிறது.[4]
மோகனா ஆறு பின்னர் இட்கோரியைக் கடந்து வடக்கே ஓடி கயா சமவெளியில் இறங்கி, தனுவா கணவாயின் அடிவாரத்தில் உள்ள பெரும் தலை நெடுஞ்சாலையைக்கடக்கிறது. இட்கோரிக்கு அருகில் இது சத்ரா-சவுபரன் சாலையை அதன் அகலமான மற்றும் மணல் கால்வாயால் வெட்டுகிறது. 3.2 கிலோமீட்டருக்கு கீழே புத்த கயாவில் நிரஞ்சனாவுடன் ஐக்கியமாகி புனித நதியான பால்கு ஆறாக உருவாகிறது. பால்கு ஆறு பராபார் மலைகளைக் கடந்ததும் மீண்டும் மோகனா என்ற பெயரைப் பெற்று இரண்டு கிளை ஆறுகளாகப் பிரிகிறது. [4]
கயா மாவட்டத்தின் எல்லைக்கு தெற்கே உள்ள நீண்ட மலைத்தொடரில், சத்ரா மாவட்டத்திற்குள், மோகனா ஆற்றின் இரண்டு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. தாமசின் எனப்படும் முதல் அருவி ஆழமான பள்ளத்தாக்கின் தலைப்பகுதியில் உள்ளது. அங்கு இந்நதி திடீரென கருப்பு பாறையின் உயர்ந்த செங்குத்தான முகத்திலிருந்து கீழே விழுந்து ஒரு குளத்தில் மூழ்கி பின்னர் விசித்திரமாக சுருக்கப்பட்ட பாறையின் இருண்ட பள்ளத்தில் விழுகிறது. அரியாகலில் உள்ள கீழ் நீர்வீழ்ச்சி மிகவும் தெளிவான அழகு காட்சியை அளிக்கிறது. இங்கு நதியானது ஒரு அழகிய குறும் பள்ளத்தாக்கு வழியாக வெளியேறி, சிவப்பு பாறைகளின் சாய்வான உயரமான மரக் கரைகளால் சூழப்பட்ட பெரிய குளத்தில் இறங்குகிறது. தாமசின் அருவி சத்ரா நகரத்திலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. [5]
{{cite book}}
: |work=
ignored (help)