மோகன் சரண் மாச்சி | |
---|---|
![]() | |
15வது ஒடிசா முதலமைச்சர் | |
பதவியில் 12 சூன் 2024 | |
ஆளுநர் | ரகுபர் தாசு |
Deputy | கனக் வரதன் சிங் தியோ பிரவாதி பரிதா |
Succeeding | நவீன் பட்நாய்க் |
ஒடிசாவின் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | அபிராம் நாயக் |
தொகுதி | கியோஞ்கர் |
பதவியில் 2000–2009 | |
முன்னையவர் | ஜோகேந்திர நாயக் |
பின்னவர் | சுபர்ணா நாயக் |
தொகுதி | கியோஞ்கர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 சனவரி 1972 கேந்துசர் மாவட்டம், ஒடிசா, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | பிரியங்கா மார்னிதி |
பிள்ளைகள் | 3 |
வாழிடம் | கேந்துசர், ஒடிசா, இந்தியா |
முன்னாள் மாணவர் | சந்திர சேகர் கல்லூரி, சம்பூரா (இளங்கலை) தென்கானல் சட்டக் கல்லூரி, (இளங்கலைச் சட்டம்) |
தொழில் | சமூகப்பணி |
சமயம் | இந்து |
மூலம்: odishaassembly.nic.in |
மோகன் சரண் மாச்சி (Mohan Charan Majhi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1972 ஆம் ஆண்டு சனவரி மாதம் 6 ஆம் தேதியன்று கியோஞ்சர் மாவட்டத்தில் குணராம் மாச்சிக்கு மகனாக இவர் பிறந்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக கியோஞ்சார் தொகுதியில் போட்டியிட்டு ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக கியோஞ்சரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3][4]
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில், பாரதிய சனதா கட்சியின் வேட்பாளராக கியோஞ்சர் சட்டமன்றத் தொகுதியில் மோகன் சரண் மாச்சி போட்டியிட்டார். இந்த தேர்தலில், இவர் மொத்தம் 47,283 வாக்குகள் பெற்றும் தோற்கடிக்கப்பட்டார்
மோகன் சரண் மாச்சி 2024-இல் நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கேந்துசார் மாவட்டத்தில் உள்ள கியோஞ்சர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் 11 சூன் 2024 அன்று, ஒடிசாவின் அடுத்த முதலமைச்சராக அவர் அறிவிக்கப்பட்டார்.