மோகன் சிங் மேத்தா (Mohan Sinha Mehta)(1895-1986) [1] இந்தியாவின் ராஜஸ்தானின் உதய்பூரில் அமைந்துள்ள வித்யா பவன் நிறுவனங்கள், சேவா மந்திர் ஆகியவற்றின் நிறுவனராவார்.
மோகன் சிங் மேத்தா ராஜஸ்தானின் பில்வாராவில் 1895 ஏப்ரல் 20 அன்று ஜீவன் சிங் மேத்தா என்பவருக்கு பிறந்தார். இவரது மனைவியின் பெயர் உலாஸ் குமாரி மேத்தா, இவர்களுக்கு ஜகத் சிங் மேத்தா என்ற ஒரு மகன் இருக்கிறார். அவர் இந்திய அரசாங்கத்தில் வெளியுறவு செயலாளராக இருந்தார்.
மேத்தா, ஆக்ராவின் ஆக்ரா கல்லூரியில் 1916இல் தனது இளங்கலைப் பட்டம் பெற்றார். 1918இல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும், சட்டம் (1919) படித்தார். 1927இல் இலண்டன் பொருளியல் பள்ளியில் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை முடித்தார். 1927ஆம் ஆண்டில் பார் அட் லா ஆனார்