மோகினி டே[1] | |
---|---|
பிறப்பு | 20 சூலை 1996[2] |
பிறப்பிடம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
இசை வடிவங்கள் |
|
தொழில்(கள்) | இசைக்கலைஞர் |
இசைக்கருவி(கள்) | Bass guitar[3] |
இசைத்துறையில் | 2010–தற்போது வரை |
இணையதளம் | mohinideybass |
மோகினி டே (Mohini Dey) இந்தியாவின் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தாழ்கேளொலி இசைக் கலைஞர் ஆவார்.[4] 1996 ஆம் ஆண்டு சூலை மாதம் 20 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். வங்காளதேசத்தைச் சேர்ந்த கான் பங்களா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விண்டு ஆஃப் சேஞ்சு மற்றும் கோக் சுடுடியோ இந்தியா ஆகிய தொலைக்காட்சி தொடர்களின் ஒரு பகுதியாக இருந்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்காகவும் இவர் இசையமைக்கிறார்.[5][6][7]
மோகினி டே மும்பையில் பிறந்து வளர்ந்தார்.[8] இவர் பிறந்தபோது, தந்தை ஓர் அமர்வு இசைக்கலைஞராக பணிபுரிந்ததால், குடும்பத்தினர் அன்றாட வாழ்க்கையைச் சந்திக்கவே சிரமப்பட்டனர். இவரது இசைத் திறமையை மூன்று வயதிற்கு முன்பே கவனித்த தந்தை அத்திறமையை வளர்க்கத் தொடங்கினார். ஒன்பது அல்லது பத்து வயதில் மோகினி டே தனது முதல் தாழ்கேளோலி கிதாரைப் பெற்றார்.[3][9]
11 வயதிலிருந்தே மோகினி டே ஒரு திறமைசாலியாகத் திகழ்ந்தார். இவரது திறமையை இவரது தந்தையின் நண்பர் ரஞ்சித் பரோடு கவனித்தார். அவர் தனது இசைக்குழுவின் சுற்றுப்பயணங்களுக்கு மோகினியை அழைத்துச் சென்றார். இந்திய திரைப்பட இசையமைப்பாளான லூயிசு பேங்கு இவருக்கு வழிகாட்டியாக இருந்தார்.[10]