![]() | |
---|---|
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 156436-89-4 ![]() |
ATC குறியீடு | ? |
பப்கெம் | CID 158385 |
ChemSpider | 139341 ![]() |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D05080 ![]() |
ChEBI | [1] ![]() |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C52 |
மூலக்கூற்று நிறை | 1148.403 கி/மோல் |
SMILES | eMolecules & PubChem |
|
மோடெக்சாபின் கடோலினியம் (Motexafin gadolinium) என்பது C52H72GdN5O14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இம்மருந்து வகைச் சேர்மத்திற்கு எக்சைட்ரின் என்ற வணிகப் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தயோரிடாக்சின் ரிடக்டேசு மற்றும் ரிபோநியூக்ளியோடைடு ரிடக்டேசு நொதிகளை இம்மருந்து தடுக்கிறது. மூளைப் புற்றுநோய் பரவலை உணரும் வேதியியல் முகவராகவும் இச்சேர்மம் முன்மொழியப்பட்டுள்ளது[1]
2006 ஆம் ஆண்டு மே மாதம் 9 அன்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்புக்கு ஒரு புது மருந்தின் பயன் மருந்து நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்படுகிறது. [2] 2007 டிசம்பரில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு மோடெக்சாபின் கடோலினியம் மருந்து அங்கீகரிக்கப்படவில்லை என்ற கடித்த்தை அளித்தது. [3].