மோதி லால் கெம்மு Moti Lal Kemmu | |
---|---|
பிறப்பு | சிறிநகர், Jammu & Kashmir, India |
பணி | நாடகாசிரியர் |
மோதி லால் கெம்மு (Moti Lal Kemmu) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தைச் சேர்ந்த சமகால நாடக ஆசிரியர் ஆவார். சிறீநகரில் ஒரு காசுமீரி இந்து குடும்பத்தில் இவர் பிறந்தார். சம்மு காசுமீர் பல்கலைக்கழகத்தில் பயின்றார். நகர் உதாசு, டீன் அசங்கதி அய்காங்கி (1968), லால் திரேயாசு, லோல் ரே (1972), திரூனோவ் (1970), திசாய் (1973), நாடக் திரூச்சே (1980), டோட்டா டோல் ஐனா (1985) ஆகியவை மோதிலாலில் நாடகங்களில் சிலவாகும்.[1]
அரசாங்க உதவித்தொகை மூலம், கெம்மு 1961 ஆம் ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டு வரை பரோடா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சி சி மேத்தாவிடமிருந்து நாடகம் மற்றும் நாடகத்துறையில் சிறப்புப் பயிற்சி பெற்றார். பின்னர் சம்மு மற்றும் காசுமீர் அரசாங்கத்தின் கலாச்சார அமைப்பில் 1964 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.[2]
2012 ஆம் ஆண்டு மோதி லால் கெம்முவுக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[3]