மோர்கன் வார்டு (1901 – 1963) என்ற அமெரிக்க கணித மேதை கலிபோர்னியா தொழில் நுட்ப நிறுவனத்தில் கணித பேராசிரியராக இருந்தார்.[1]
வார்டு பொது எண்ணியலின் அடிப்படை தலைப்பில் அவரது ஆலோசகர் எரிக்டெம்பிள் பெலின் உதவியோடு 1928 ஆம் ஆண்டில் கால்டெக்கில் முனைவர் பட்டம் பெற்றார்.[2] அவர் கால்டெக்கில் ஒரு ஆராய்ச்சியாளராகவும்இ 1929-ல் ஆசிரியராகவும் தொடர்ந்து 1963-ல் தனது இறப்பு வரை அங்கே இருந்தார்.[3] அவரது முனைவர் பட்ட மாணவர்களில் ராபர்ட் பிடில் வொர்த் கால்டெக் பேராசிரியரானார்.[2] வார்டு 500 க்கும் மேற்பட்ட கணித மேதைகளுக்கு முன்னோடியாகவும் டில்வொர்த் மற்றும் டொனால் எ.டார்லிங் ஆகியோரின் மூலம் கணினி அறிவியல் வல்லுனராகவும் இருக்கிறார்.[2]
வார்டின் ஆராய்ச்சி ஆர்வம் இயற்பியல் தொடர்பு மற்றும் வகுபடும் தன்மையின் தீர்வு சார்ந்தும்இ முழு எண் கெழு சமன்பாடுஇ கணித ஓருறுப்புஇ நுண் இயற்கணிதம்இ கணித சார்பு சமன்பாடுஇ பின்னல் கோட்பாடு மற்றும் எண்ணியியல் பகுப்பாய்வுகளுக்கு இiடையேயான ஆய்வலரின் உய்த்துணர்வு படிகளின் கூடுதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.[4] அவர் தேசிய அறிவியல் அறக்கட்டளையோடு இணைந்து தொடக்கப்பள்ளி கணித பாடத்திட்ட சீர்திருத்தத்திற்கு பணிபுரிந்தார். .[3] மேலும் அவர் கிளாரன்ஸ் எட்டல் ஹார்ட்குரோடு இணைந்து [5] 'நவீன ஆரம்ப கணிதம்' என்ற புத்தகத்தை எழுதினார்
வார்டின் படைப்புகள் கால்டெக் நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.[3] நவம்பர் 21-22இ 1963 அன்று கால்டெக்கில் அவரது நினைவாக கருத்தரங்கு நடைபெற்றது.[4]