மோர்கவோன் கணேசர் ஆலயம் | |
---|---|
![]() ஆலயத்தின் சிகரம் | |
மகாராஸ்டிராவில் அமைவு | |
ஆள்கூறுகள்: | 18°16′33.8″N 74°19′17″E / 18.276056°N 74.32139°E |
பெயர் | |
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு: | ஸ்ரீ மயூரேஸ்வரர் மந்திர் |
மராத்தி: | श्री मयूरेश्वर मंदीर |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | மகாராஸ்டிரா |
மாவட்டம்: | புனே மாவட்டம் |
அமைவு: | மோர்கவோன் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மயூரேஸ்வரர் ல்லது மோரேஸ்வர் |
சிறப்பு திருவிழாக்கள்: | விநாயக சதுர்த்தி, விநாயக ஜெயந்தி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | மந்திர் கட்டிடக்கலை |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | கி.பி. 17 நூற்றாண்டுக்கு முன் |
அமைத்தவர்: | அறியப்படவில்லை |
மோர்கவோன் கணேசர் ஆலயம் அல்லது ஸ்ரீ மயூரேஸ்வரர் மந்திர் (Morgaon Ganesha Temple) என்பது இந்தியாவில் அமைந்துள்ள விநாயகருக்கான இந்து ஆலயமாகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள புனே நகரில் இருந்து 80 கிலோமீற்றர்கள் (50 மைல்கள்) தொலைவில் உள்ள மோர்கவோன் எனும் இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.[1] அஷ்டவிநாயக பாதயாத்திரைத் தலங்கள் எனும் எட்டு விநாயகர் ஆலயங்களுக்கான பாதயாத்திரை இவ்வாலயத்தில் இருந்து ஆரம்பித்து இவ்வாலயத்திலேயே நிறைவடைகின்றது.
கணாபத்திய இந்துசமயப் பிரிவினர் வழிபடும் முக்கிய விநாயகர் ஆலயங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள விநாயகர் ஆலயங்களில் மிகவும் பிரசித்தமான யாத்திரைத்தலம் இதுவேயாகும்.[2][3][4] விநாயகரின் புராணக் கதைகளைக்கூறும் முத்கல புராணத்தில் மோர்கவோன் கணேசர் ஆலயம் பற்றிய 22 பகுதிகள் காணப்படுகின்றன. விநாயகரைத் தரிசிக்கக் கூடிய பூலோகத்தில் உள்ள முக்கிய மூன்று ஆலயங்களில் கைலாயத்தையும், பாதாளத்தையும் அடுத்து மோர்கவோன் ஆலயமும் ஒன்றாகும் என கணேச புராணத்தில் கூறப்பட்டுள்ளது. காசிக்கு ஒப்பான தலமாக இவ்வாலயம் கருதப்படுகின்றது.[2] இவ்வாலயத்தின் மூலவரான மயூரேஸ்வரரின் வாகனம் மயிலாகும்.
சிந்து எனும் அரக்கனைக் கொல்வதற்காக ஆறு கரங்களையும் வெண்ணிற மேனியையும் கொண்ட உருவம் அதாவது மயூரேஸ்வர அவதாரத்தினை விநாயகர் இவ்வாலயத்திலேயே எடுத்தார் என ஐதீகக் கதைகள் கூறுகின்றன.[5]
மோர்ய கோசவி அல்லது மொரோபா எனவும் அழைக்கப்படும் விநாயக பக்தர் சின்ச்வார்ட் எனும் இடத்தில் புதிய விநாயகர் ஆலயம் ஒன்றை அமைப்பதற்கு முன் இவ்வாலயத்தையே வழிபட்டு வந்தார். 18 ஆம் நூற்றாண்டில் மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த பிராமண பேஷ்வாக்களால் இவ்வாலயமும் புனேயிலுள வேறு சில விநாயகர் ஆலயங்களும் பராமரிக்கப்பட்டு வந்தன.[6] பேஷ்வாக்களின் குலதெய்வம் விநாயர் ஆவார். இது போன்ற விநாயகர் ஆலயங்களுக்கு மானியம் அல்லது நிதியுதவிகளை வழங்குவதை பேஷ்வாக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.[2][7]
சமர்த்த ராமதாசரினால் இக்கோயிலின் மூலவரான மயூரேஸ்வரர் மீது பிரபல மாராத்திய பஜனைப் பாடலான "சுகக்கிர துகக்கிர" எனும் ஆராத்திப்பாடல் பாடப்பட்டது.[8]
தற்போது இவ்விநாயகர் ஆலயம் சின்ச்வார்ட் விநாயகர் ஆலய தேவஸ்தான சபையினால் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாலயமானது பாமினி சுல்தான்களின் ஆட்சியின் போது கருங்கல்லினால் கட்டப்பட்டுள்ளது. இதனால் இவ்வாலயத்தின் கட்டட மைப்பின் முஸ்லிம் கட்டடக்கலையின் தாக்கத்தினைக் காணலாம்.[1][3] இவ்வாலயத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு வாயில்கள் காணப்படுகின்றன. முகலாயப் பேரரசின் ஆட்சியின் போது இவ்வாலயத்திற்கு எவ்வித பாதிப்பும் வராததன் காரணம் இது தொலைவில் நின்று பார்க்கும் போது ஓர் முஸ்லிம் பள்ளிவாசல் போல் தெரிவதே ஆகும். இவ்வாலயத்தைச் சுற்றி 50 அடி உயரத்தில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
{{cite book}}
: |first=
missing |last=
(help); |work=
ignored (help)