மோர்வி இராச்சியம் મોરબી રિયાસત | |||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
கொடி | |||||
குஜராத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில் மோர்வி இராச்சியத்தின் அமைவிடம் | |||||
தலைநகரம் | மோர்பி | ||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1698 | |||
• | இந்திய விடுதலை | 1948 | |||
பரப்பு | |||||
• | 1931 | 627 km2 (242 sq mi) | |||
Population | |||||
• | 1931 | 42,602 | |||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) |
மோர்வி இராச்சியம் ('Morvi State, also spelled as Morvee State or Morbi State)', இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவில் இருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்தில் மோர்வி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மோர்வி இராச்சியம் 627 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 42,602 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.
மோர்வி இராச்சியம் 1698-ஆம் ஆண்டில் கட்ச் பகுதியின் கன்யோஜி ராவாஜியால் நிறுவப்பட்டது. [1] 1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற மோர்வி இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக விளங்கினர். இது பம்பாய் மாகாணத்தின் கத்தியவார் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 1948-இல் மோர்வி இராச்சியம் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, மோர்வி இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
மோர்வி ஆட்சியாளர்களை தாக்கூர் அல்லது மகாராஜாக்கள் என்பர்.[2]