![]() 2019–20 Vவிஜய் அசாரே தொடரில் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | யசஸ்வி பூபேந்திர குமார் ஜைஸ்வால் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 28 திசம்பர் 2001 சூரியவான், உத்தரப் பிரதேசம், இந்தியா[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அ்டி[2] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடக்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை நேர்ச்சுழல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துவக்க மட்டையாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018/19–2022/23 | மும்பைத் துடுப்பாட்ட அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2020–தற்போது வரை | ராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 19) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதது அறிமுகம் | 7 சனவரி 2019 மும்பை v சத்தீசுகர் துடுப்பாட்ட அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பஅது அறிமுகம் | 20 செப்தம்பர் 2019 23 வயதிற்குட்பட்டோர் இந்திய அணி v 23வயதிற்குட்பட்டோர் வங்காளதேச அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 9 April 2023 |
யசஸ்வி பூபேந்திர குமார் ஜைஸ்வால் (Yashasvi Jaiswal, 28 திசம்பர் 2001) ஓர் இந்தியத் தொழில்முறை துடுப்பாட்ட வீரர் ஆவார், உள்ளூர்ப் போட்டிகளில் மும்பை மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடுகிறார். [3] பட்டியல் அ போட்டிகளில் இரட்டை நூறு அடித்த உலகின் இளம் வீரர் இவராவார்.[4] 2020 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் இந்திய U-19 அணியின் அதிக ஓட்டங்கள் எடுத்து, தொடர் நாயகனாகத் தேர்வானார்.[5] 2020 ஐபிஎல் ஏலத்தில், ஜெய்ஸ்வால் ₹2.4 கோடி (ஐஅ$2,80,000) தொகைக்கு ராஜஸ்தான் ராயல்சால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[6][7]
ஜெய்ஸ்வால், திசம்பர் 28, 2001 அன்று உத்தரபிரதேசத்தின் பதோஹியில் உள்ள சூரியவான் என்ற இடத்தில் ஒரு சிறிய வன்பொருள் கடையின் உரிமையாளரான பூபேந்திர ஜெய்ஸ்வால் மற்றும் இல்லத்தரசி காஞ்சன் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு ஆறு குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்தார். பத்து வயதில், ஆசாத் மைதானத்தில் துடுப்பாட்டப் பயிற்சி பெறுவதற்காக மும்பையின் தாதருக்குக் குடிபெயர்ந்தார். தாதர் மைதானத்திலிருந்து வெகு தொலைவில் இருந்ததால்,காள்பாதேவிக்கு இடம்பெயர்ந்தார். அங்கு அவருக்கு குறைந்த தர வேலைக்காக பால் கடையில் தங்குமிடம் வழங்கப்பட்டது. அவரது துடுப்பாட்டப் பயிற்சிக்கு இடையில் கடையில் அதிக உதவிகளை வழங்க முடியாமல் போனதால் கடைக்காரரால் வெளியேற்றப்பட்டார். தங்க இடம் இல்லாததால், ஜெய்ஸ்வால் மைதானத்தில் உள்ள ஒரு கூடாரத்தில் தங்கினார், [8] அங்கு அவர் அடிக்கடி பசியுடன் தூங்கினார், மேலும் பானிபூரி விற்று வாழ்ந்து வந்தார். [9]
மூன்று வருடங்கள் கூடாரங்களில் வாழ்ந்த பிறகு, ஜெய்ஸ்வாலின் துடுப்பாட்டத் திறமையை டிசம்பர் 2013 இல் சாந்தகுரூசில் துடுப்பாட்ட அகாதமியை நடத்தி வந்த ஜுவாலா சிங் கண்டறிந்தார். ஜெய்சுவாலின் சட்டப்பூர்வ பாதுகாவலராக ஆவதற்கு முன் மற்றும் அவரது பிரதிந்தித்துவ அதிகாரத்தைப் பெறுவதற்கு முன்பாக அவர் ஜெய்சுவாலுக்கு தங்குவதற்கு ஓர் இடத்தை வழங்கினார்.[10][8]
ஜெய்சுவால் முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு கில்ஸ் ஷீல்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 319 ஓட்டங்கள் எடுத்து 13/99 இலக்குகளை வீழ்த்தியதன் மூலம் கவனம் பெற்றார். இது இந்தியாவில் பள்ளிகள் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒரு பன்முக வீரருக்கான சாதனையாக உள்ளது. [11] [12] மும்பை 16 வயதுக்குட்பட்டோர் அணிக்கும், பின்னர் இந்திய தேசிய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [11] இந்திய அணி வென்ற 2018 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பையில் 318 ஓட்டங்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார். [13] [14]
சூன் 2023 இல், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். [15] தொடரின் முதல் போட்டியில் அறிமுகமானார், தொடக்க வீரராக களமிறங்கி 171 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். [16] ஆகஸ்ட் 2023 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பன்னாட்டு இருபது20 தொடரின் 3வது போட்டியில் அறிமுகமானார். [17] தொடரின் நான்காவது போட்டியில் தனது முதல் அரைசதத்தை 51 பந்துகளில் 84 * ரன்கள் எடுத்தார். [18] [19]
2020 ஐபிஎல் ஏலத்தில், 2020 இந்தியன் பிரீமியர் லீக்கில், ராஜஸ்தான் ராயல்ஸால் வாங்கப்பட்டார். [20] 22 செப்டம்பர், 2020 அன்று முதல் இருபது20 போட்டியில் அறிமுகமானார். 2 அக்டோபர், 2021 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் அரைநூறினைப் பதிவு செய்தார் [21] [22] 30 ஏப்ரல்,2023 இல் தனது முதல் நூறு ஓட்டத்தினை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 124 (62) அடித்தார்.[23]
2022 ஆம் பருவத்தில் முதல் 3 போட்டிகளில் 25 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார், அடுத்த 6 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில், 19 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்த போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்சுக்கு எதிராக 41 ஓட்டங்கள் எடுத்தார்.
2024 பருவத்தில், ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அணியின் வெற்றிக்கு உதவினார். [24] இறுதியில் RR அணி பிளேஆஃப்களுக்கு முன்னேறியது, ஆனால் அரையிறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தோல்வியடைந்தது.