![]() துப்பாக்கி விளையாட்டு வீராங்கனை | |||||||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | ||||||||||||||||
பிறப்பு | 30 மார்ச்சு 1997 புது தில்லி, இந்தியா[1] | ||||||||||||||||
வசிப்பிடம் | பஞ்ச்குலா, அரியானா, இந்தியா | ||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||
விளையாட்டு | குறி பார்த்துச் சுடுதல் | ||||||||||||||||
நிகழ்வு(கள்) | 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி | ||||||||||||||||
பயிற்றுவித்தது | தெயிந்தர் சிங் தில்லான் | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| |||||||||||||||||
1 செப்டம்பர் 2019 இற்றைப்படுத்தியது. |
யசாசுவினி சிங் தேசுவால் (Yashaswini Singh Deswal) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். 2019 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் இரியோ டி செனீரோவில் நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடும்போட்டி கூட்டமைப்பு போட்டியில் 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடும் பிரிவில் தேசுவால் தங்கப் பதக்கம் வென்றார். இதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் நடக்கவிருந்த போட்டியில் இந்தியா பங்கேற்கும் தகுதியைப் பெற்றது.
தேசுவால் 1997 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 30 அன்று புது தில்லியில் பிறந்தார். இவரது தந்தை எசு.எசு.தேசுவால் ஓர் இந்தியக் காவல் பணி அலுவலராவார். இந்தியா-திபெத் எல்லை காவல்துறை பொது இயக்குநராக இவர் பணிபுரிந்தார். தாய் சரோச் தேசுவால் அரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா மாவட்டத்தில் முதன்மை வருமான வரி தலைமை ஆணையராக பணியாற்றி வருகிறார். 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாத நிலவரப்படி சண்டிகரில் உள்ள டி.ஏ.வி கல்லூரியில் தேசுவால் படித்துக் கொண்டிருந்தார்.[2]