யசோதரா தசப்பா | |
---|---|
பிறப்பு | [1] பெங்களூர், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு | 28 மே 1905
இறப்பு | 1980 |
படித்த கல்வி நிறுவனங்கள் | ராணி மேரி கல்லூரி |
பணி | சமூக சீர்திருத்தவாதி அரசியல்வாதி இந்திய சுதந்திர ஆர்வலர் காந்தியன் |
வாழ்க்கைத் துணை | எச். சி. தசப்பா |
பிள்ளைகள் | துளசிதாஸ் தசப்பா |
விருதுகள் | பத்ம பூஷண் |
யசோதரா தசப்பா(Yashodhara Dasappa) ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர், காந்தியசிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் கர்நாடக மாநில அமைச்சராக இருந்தவர்[2].அவர் இந்திய தேசிய காங்கிரஸுடன் அரசியல் ரீதியாக இணைந்திருந்தார் மற்றும் எஸ். ஆர். காந்தி (1962)[3] மற்றும் எஸ். நிஜலிங்கப்பா (1969)[4] தலைமையிலான கர்நாடக மாநில அரசாங்கங்களில் அமைச்சராக பணியாற்றினார்.
யசோதரா தசப்பா 1905 மே 28 அன்று பெங்களூரில் பிறந்தார். அவர் பிரபல சமூக சேவகர் கே.எச்.ராமையா அவர்களின் மகள்.ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவர் ஒரு சமூக ஆர்வலராக மாறி இந்திய சுதந்திர போராட்டத்தில் சேரத் தேர்ந்தெடுத்தார்.[5].அவர் லண்டன் மிஷன் பள்ளி மற்றும் மெட்ராஸில் உள்ள குயின் மேரி கல்லூரியில் பயின்றார்.யஷோதரா ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த எச். சி. தசப்பாவை மணந்தார்[6] இவர்களின் இளைய மகன் துளசிதாஸ் தசப்பா சரண் சிங் அமைச்சரவையில் மாநில அமைச்சராக இருந்தார்[2].
அவர் 1980 இல் இறந்தார்.
அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், 1930 களின் வனசத்தியாக்கிரக இயக்கம் போன்ற பல சமூக இயக்கங்களிலும் தீவிரமாக செயல்பட்டதாகக் கூறப்பட்டது, இதன் விளைவாக 1200 க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்[7],மற்றும் 35 பேர் பங்கெடுத்த 1938ம் ஆண்டின் விதுராஷ்வத அத்தியாயம் எனும் இயக்கத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்[8] இந்த இயக்கத்தில் பங்கேற்றதற்காக, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்[9]. அவரது வீடு நிலத்தடி சுதந்திர போராட்ட நடவடிக்கைக்கான சந்திப்பு இடமாக இருந்தது.சுதந்திர போராட்ட வீரர்ளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்ட ஹோமல்டனின் பெயரை ஒரு கட்டிடத்திற்குச் சூட்டுவதற்கு அரசு முடிவு செய்த போது அரசாங்கத்தை எதிர்த்து பல உரைகள் வழங்கினார்[5].நிஜலிங்கப்பா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக பணியாற்றியபோது, கர்நாடக மாநிலத்தில் தடையை நீக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் பதவியை ராஜினாமா செய்தார்.[3] நாட்டின் உயர்ந்த மூன்றாவதான பத்மபூஷன் விருதை இந்திய அரசு 1972 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கி கௌரவித்தது[10][11]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)