யசோதர்மன் | |
---|---|
ஹெப்தலைட்டுகள் என்ற வெள்ளை ஹூணர்களை போரில் வென்ற யசோதர்மன், ஆண்டு கி பி 528 | |
மால்வா மகாராஜா | |
மதம் | இந்து |
யசோதர்மன் (Yashodharman) சமசுகிருதம்: यशोधर्मा) பண்டைய பரத கண்டத்தின் மத்தியப் பகுதியான மால்வா நாட்டை கி பி ஆறாம் நூற்றாண்டில் ஆண்ட இந்து மன்னராவார்.[1]
கி பி ஐந்தாம் நூற்றாண்டின் நடுவில் ஹெப்தலைட்டுகள் எனும் வெள்ளை ஹூணர்கள், குப்தப் பேரரசை வடமேற்கிலிருந்து தொடர்ந்து தாக்கினர். யசோதர்மனும், குப்த மன்னரான மூன்றாம் குமாரகுப்தரும் இணைந்து, ஹூணர்களின் தலைவன் மிகிரகுலனை கி பி 528-இல் தோற்கடித்தனர்.
மால்வா மன்னர் யசோதர்மனின் இவ்வெற்றிகளை, கி பி 532-இல் எழுப்பப்பட்ட மண்டோசோர் தூணில் உள்ள மூன்று கல்வெட்டுக் குறிப்புகளில் குறிக்கப்பட்டுள்ளது.[2][3]