யமாசினா பறவையில் நிறுவனம் (Yamashina Institute for Ornithology) என்பது யப்பானில் உள்ள இலாப நோக்கற்ற பறவையியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.
யமாசினா பறவையில் நிறுவனம் முனைவர் யோசிமாரோ யாமசினாவினால் நிறுவப்பட்டது. சிபுயா, தோக்கியோவில் உள்ளது தனது வீட்டில் பறவை மாதிரிகள் மற்றும் பறவைகள் தொடர்பான புத்தகங்களைச் சேகரித்து ஒரு தனியார் அருங்காட்சியகமாக நிறுவினார். மார்க்விஸ் யமாஷினா இளவரசர் யமாஷினா கிகுமாரோவின் இரண்டாவது மகன். இவர் தனது அருங்காட்சியகத்தை 1942இல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளித்தார். இந்த நிறுவனத்தில், யாமசினா குரோமோசோம்களை அடிப்படையாகக் கொண்டு பறவைகளை வகைபிரித்தல் குறித்து ஆராய்ச்சி நடத்தினார். மேலும் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் பறவையியல் பற்றிய புத்தகங்களையும் எழுதினார்.
இந்த நிறுவனம் 1984 ஆம் ஆண்டில்தோக்கியோவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் கிழக்கே சிபாவின் அபிகோவிற்கு இடம் மாற்றப்பட்டது. இந்த நிறுவனம் யப்பானின் இம்பீரியல் குடும்பத்துடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறது. இதற்கு யப்பானின் இளவரசர் நருஹித்தோவின் இளைய சகோதரர் எச்.ஐ.எச் இளவரசர் அகிஷினோவும், அவர்களின் தங்கை இளவரசி சாயகோவும் 1992லிருந்து 2005 வரை ஆராய்ச்சியாளராக பணியாற்றினர். அங்கு இவர் மீன் கொத்தி பறவைகள் குறித்த ஆய்வில் நிபுணத்துவம் பெற்றார்.[1]
இந்நிறுவனம் மூன்று ஆராய்ச்சி பிரிவுகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது:
யமஷினா நிறுவனம் பல பத்திரிகைகளையும் ஆய்விதழ்களையும் வெளியிடுகிறது. இதில் யமஷினா இன்ஸ்டிடியூட் ஆப் பறவையியல், பறவை இடம்பெயர்வு ஆராய்ச்சி மையத்தின் ஆண்டு அறிக்கை மற்றும் ஆதரவு குழு உறுப்பினர்களுக்கான மாதாந்திர செய்தித்தாள் ஆகியவை அடங்கும்.
பறவையியல் மேம்பாடு அல்லது பறவைகளின் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த ஒரு தனிநபர் அல்லது குழுவிற்கு யமஷினா யோஷிமரோ நினைவு பறவையியல் விருதை வழங்குகிறது.