யல்டா ஹக்கிம்

யல்டா ஹக்கிம்
2017இல் யல்டா ஹக்கிம்
பிறப்பு26 சூன் 1983 (1983-06-26) (அகவை 41)
காபூல், ஆப்கானித்தான்[1]
தேசியம்ஆத்திரேலியர்
கல்விமக்குவாரி பல்கலைக்கழகம் (இதழியல்)
பணி
  • இதழியலாளர்
  • செய்தி வழங்குனர்
  • ஆவணப்பட தயாரிப்பாளர்
பணியகம்ஸ்கை நீயூஸ்
பிபிசி (முன்பு)


யல்டா ஹக்கிம் (பிறப்பு: 26 சூன் 1983)[2] ஆத்திரேலியாவைச் சேர்ந்த ஒளிபரப்பு இதழியலாளர், செய்தி வழங்குனர், ஆவணப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் பிபிசியின் உள்நாட்டு, வெளிநாட்டு தொலைக்காட்சி சேவைகளில் முதன்மை வழங்குனராக பணியாற்றியவர்.[3] எஸ்பிஎஸ் தொலைக்காட்சியில் பணியை ஆரம்பித்து, 2012 ஆம் ஆண்டில் பிபிசி தொலைக்காட்சியில் சேர்ந்தார். 2023 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் வெளியான அறிவிப்பில், யல்டா ஹக்கிம் பிபிசியிலிருந்து விலகி ஸ்கை நியூஸ் தொலைக்காட்சியில் சேரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆரம்ப கால வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

யல்டா ஆப்கானித்தானின் காபூல் நகரில் 26 சூன் 1983 அன்று பிறந்தார். யல்டா 6 மாத கைக்குழந்தையாக இருந்தபோது, சோவியத்-ஆப்கான் போர் காரணமாக இவரின் குடும்பம் நாட்டை விட்டு வெளியேறியது.[1] ஆட்களை கடத்தும் குழு ஒன்றின் உதவிகொண்டு இக்குடும்பம் பாக்கித்தானில் நுழைந்தது. பாக்கித்தானில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, 1986 ஆம் ஆண்டு இந்தக் குடும்பம் ஆத்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தது.[4]

மேற்கு சிட்னியின் பரமட்டா புறநகர்ப் பகுதியில் வளர்ந்த யல்டா, பரமட்டா நகரத்திலுள்ள மகர்துர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். அங்கு வயலின் வசிப்பவராகவும், விளையாட்டு அணியின் தலைவராகவும், மாணவப் பிரதிநிதியாகவும் இருந்தார். பரமட்டா மேற்கு பொதுப் பள்ளியிலும் கல்வி கற்றார்.[1]

2002-2004 காலகட்டத்தில் மக்குவாரி பல்கலைக்கழகத்தில் இளங்கலை (இதழியல்) படித்தார். இப்பல்கலைக்கழகத்தின் சங்கத்தில் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் செயலாற்றினார்.[4] 2005 ஆம் ஆண்டு, சிட்னியிலுள்ள மேக்லே கல்லூரியில் இதழியலில் பட்டயம் பெற்றார். 2007-2009 காலகட்டத்தில் விக்டோரியா மாநிலத்திலுள்ள மொனாஷ் பல்கலைக்கழகம் வழங்கும் இளங்கலை (இதழியல்) படிப்பை தொலைதூரக் கல்வி முறையில் தொடர்ந்தார். சிறப்பு ஒலிபரப்புச் சேவை வழங்கும் பயிற்சித் திட்டத்திலும் சேரும் வாய்ப்பும் யல்டாவிற்குக் கிடைத்தது.[1][5]

பாரசீக மொழி, தாரி மொழி, இந்தி, உருது, பஷ்தூ மொழி ஆகிய மொழிகளைப் பேசக்கூடியவர். 2022 ஆண்டு நிலவரப்படி, மாண்டரின் மொழியை கற்றுக்கொண்டிருந்தார்.[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Wilmoth, Peter (16 July 2011). "Anchor woman". The Weekly Review (Australia) இம் மூலத்தில் இருந்து 11 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170711215203/https://www.theweeklyreview.com.au/meet/1822362-anchor-woman/. 
  2. "Yalda Hakim - Australian broadcaster". BiographyTree (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-06-15. பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.
  3. "BBC News channel announces chief presenter line-up for revamp" (in en-GB). BBC News. 2023-02-02. https://www.bbc.com/news/entertainment-arts-64496388. 
  4. 4.0 4.1 "Home". Yalda Hakim Foundation (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
  5. Browne, Rachel (24 October 2010). "She's at home in the hot seat". The Age (Melbourne). http://www.theage.com.au/entertainment/tv-and-radio/shes-at-home-in-the-hot-seat-20101023-16ykx.html. 
  6. "Impact – Yalda Hakim". BBC. பார்க்கப்பட்ட நாள் 9 September 2022.
  7. Yalda Hakim Profile பரணிடப்பட்டது 2014-10-07 at the வந்தவழி இயந்திரம் SBS Dateline