யவன் மத்ஸ்
| |
---|---|
பிறந்தது | 1400கள் காஷ்மீர்
|
இறந்தது | |
மற்ற பெயர்கள் | ஷங்கா பீபி |
சகாப்தம் | ஷா மிர் சகாப்தம் |
அறியப்படுவது | ஷேக் நூர்-உத்-தின் வாலியின்
பெண் சீடர் |
யவன் மாட்ஸ் (காஷ்மீர் یاون مژ) காஷ்மீரின் ஷேக் நூர்-உத்-தின் வாலியின் பெண் சீடர் ஆவார். இவர் ஒரு அழகான நடனக் கலைஞர் மற்றும் பரத்தை பெண்ணாவார். யவன் மாட்ஸ் பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஷ்மீரின் உயர் சமூகத்தில் பிரபலமானவராக இருந்தார். [1]
நிஷாத்திற்கு அருகிலுள்ள இஷ்பர் கிராமத்தில் ஒரு புனிதமான மனிதர், மிகவும் பிரபலமான பிராமண துறவி இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு காஷ்மீரில் ஏராளமான விசுவாசிகள் இருந்தனர். ஒரு நாள் காஷ்மீர் சுல்தான் ( சிகந்தர், அலி ஷா அல்லது புட்ஷா) அவரது இடத்தில் தோன்றினார். பிராமணர், சுல்தானைப் பார்க்க மறுத்துவிட்டார். அவமதிக்கப்பட்ட சுல்தான் தகுந்த பழிவாங்கலைத் திட்டமிட்டார். சில நாட்களுக்குப் பிறகு சுல்தான் அழகான யவன் மத்ஸை அனுப்பினார். அந்த பெண் ஒரு பக்தையாக பிராமணரைப் பார்க்கச் சென்றாள். அவளுடைய தோற்றத்தால் வசீகரிக்கப்பட்ட அப்பிராமணர் செய்வதறியாது திகைத்தார். நன்கு இணந்திருந்த காஷ்மீரி பண்டிதர்களில் சிலர் அதே தந்திரங்களை அந்த காலத்தின் மிக முக்கியமான முஸ்லீம் துறவியான ஷேக் நூர்-உத்-தின் வாலி மீது பயன்படுத்த விரும்பியதாகக் கூறப்படுகிறது. ரேஷியை மயக்க யவன்மத்ஸிர்க்கு பணம் கொடுத்து அனுப்பினர். யவன் மத்ஸ் தனது அழகைத் தந்து முயற்சித்தாலும் ரேஷியின் வசீகரமே வெற்றி பெற்றது. யவன் மத்ஸ் ஒரு சமுதாயப் பெண்ணின் வாழ்க்கையைத் துறந்து ரேஷியின் சீடர்களில் ஒருவரானார். [2] மகானான ரேஷி தனது கவிதைகளில் ஒன்றான "பயேக் பயஸ் யவன் மாத்ஸீ"யைக் குறிப்பிட்டதன் மூலம் (யவன் மத்ஸ் நீங்கள் ஒரு நாள் வருந்துவீர்கள்) யவன் மத்ஸை அழியா மனிதராக்கினார். [3]
அவரது மாற்றத்திற்குப் பிறகு யவன் மத்ஸுக்கு ஷங்கா பீபி என்ற பெயர் வழங்கப்பட்டது. மேலும் நந்த் ரேஷியின் கல்லறையில் இருந்த ஒரே பெண் முஜாவிர் இவரேயாவார். அவர் ட்ஸாரிலுள்ள நந்த் ரேஷியின் சன்னதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். [4]