![]() | |
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | யாசுதிகா ஹரிசு பாட்யா |
பிறப்பு | 11 சனவரி 2000 வடோதரா, குசராத்து, இந்தியா |
மட்டையாட்ட நடை | இடக்கை |
பந்துவீச்சு நடை | இடது-கை வழமைச் சுழல் |
பன்னாட்டுத் தரவுகள் | |
நாட்டு அணி | |
ஒரே தேர்வு (தொப்பி 89) | 30 செப்டம்பர் 2021 எ. ஆத்திரேலியா |
ஒநாப அறிமுகம் (தொப்பி 132) | 21 செப்டெம்பர் 2021 எ. ஆத்திரேலியா |
கடைசி ஒநாப | 26 செப்டெம்பர் 2021 எ. ஆத்திரேலியா |
இ20ப அறிமுகம் (தொப்பி 68) | 7 அக்டோபர் 2021 எ. ஆத்திரேலியா |
கடைசி இ20ப | 9 அக்டோபர் 2021 எ. ஆத்திரேலியா |
மூலம்: Cricinfo, 9 அக்டோபர் 2021 |
யாசுதிகா பாட்யா (Yastika Bhatia பிறப்பு 11 சனவரி 2000) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார் . [1] [2] [3] பிப்ரவரி 2021 இல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டப் போட்டியில் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியில் அறிமுகமானார். [4] [5] [6] இவர் திசம்பர் 2019 இல் ஆத்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது இந்திய மகளிர் அ அணிக்காக விளையாடினார். [7]
ஆகத்து 2021 இல் பாட்யா ஆத்திரேலிய அணிக்கு எதிரான பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டத் தொடருக்காக மீண்டும் தேசிய அணிக்குத் தேர்வானார். [8] [9] [10] மகளிர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 21 செப்டம்பர் 2021 அன்று இந்தியாவுக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமானார். [11] 30 செப்டம்பர் 2021 இல் இந்தியாவுக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். [12] 7 அக்டோபர் 2021 அன்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். [13]