யாசுமினம் மெசுனி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | J. mesnyi
|
இருசொற் பெயரீடு | |
Jasminum mesnyi Hance.[1] | |
வேறு பெயர்கள் | |
Jasminum primulinum |
யாசுமினம் மெசுனி (தாவர வகைப்பாட்டியல்: Jasminum mesnyi) என்பது மல்லிப் பேரினத்தைச் சார்ந்த, இருநூற்றிற்கும் மேற்பட்ட மல்லிகை இனங்களில் ஒன்றாகும். இப்பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி[2], முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில்[3] ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இத்தாவரயினம், யாசுமினம் பிரிமுலினம் என்பதும் இதன் மற்றொரு தாவரவியல் பெயரிலும் அழைக்கப்படுகிறது. 1882 ஆம் ஆண்டு இவ்வினத்தினைப் பற்றிய தாவரவியல் முதற்குறிப்பு உள்ளது.
அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும். [4] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது. [5]
சீனா, வியட்நாம், அலபாமா, அர்கெந்தீனா, புளோரிடா, ஒண்டுராசு, இந்தியா, மெக்சிக்கோ, பாக்கித்தான், மேற்கு இமயமலை ஆகிய நாடுகளில் இவ்வினம் காணப்படுகின்றன.[6] இதன் பயன்பாடு நடுசீனாவில் அதிகம் இருப்பதால், இதனை நடுசீன மல்லி எனவும் அழைக்கலாம்.
Jasminum primulinum Hemsl. ex Baker என்பது இதன் இணைப்பெயராகும். இது குறித்த முதல் ஆவணக்குறிப்பு 1895 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[7]
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)