யாதனபுடி சுலோச்சனா இராணி (Yaddanapudi Sulochana Rani)(2 ஏப்ரல் 1940 - 18 மே 2018) என்பவர் ஓர் தெலுங்கு மொழி நாவலாசிரியர் ஆவார்.[1] 1970கள் மற்றும் 1980களின் முற்பகுதியில், குறிப்பாக பெண்கள் மத்தியில், இவருக்கு வலுவான ரசிகர் பட்டாளம் இருந்தது.[2] இவரது பல கதைகள் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டன. இவர் இரண்டு முறை நந்தி விருதுகளை வென்றார்.
யாதனபுடி சுலோச்சனா இராணி 1940ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி[3] ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள காசாவில் ஒரு தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார்.[4] இவருக்கு சிறு வயதிலிருந்தே இலக்கியத்தின் மீது வலுவான நாட்டம் இருந்தது. இவர் 80க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார்.[4]
யாதனபுடி தனது மகளைப் பார்க்கச் சென்றபோது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மே 18, 2018 அன்று இறந்தார். அப்போதைய தெலங்காணா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மற்றும் ஆந்திரப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.[5][4]
வ. எண் | நாவல் | திரைப்படம் |
---|---|---|
1 | மீனா | மீனா (1973) 'அ ஆ (2016)[6] |
2 | ஜீவனா தாரங்கலு | ஜீவனா தாரங்கலு |
3 | (தெரியவில்லை) | அம்மா நானா |
4 | செகரட்டரி | செகரட்டரி |
5 | இராதா கிருஷ்ணா | இராதா கிருஷ்ணா |
6 | அக்னி பூலு | அக்னி பூலு |
7 | பிரேம லேகலு | பிரேம லேகலு |
8 | பங்காரு கலலு | பங்காரு கலலு |
9 | விஜேதா | விசித்ரா பந்தம் |
10 | ஜெய் ஜவான் | ஜெய் ஜவான் |
11 | ஆத்ம கவுரவம் | ஆத்ம கவுரவம் |
12 | பிரேமா தீபிகா | காஞ்சனா கங்கா |
13 | கிரிஜா கல்யாணம் | கிரிஜா கல்யாணம் |
14 | ஆத்மியுலு | ஆத்மியுலு |
15 | மதுர சுவப்னம் | மதுர சுவப்னம் |
16 | மொகாலி ரெகுலு | மொகாலி ரெகுலு |
17 | சண்டிப்ரியா | சண்டிப்ரியா |