யாரிதா ஓல்புரூக்

யாரிதா சி. ஓல்புரூக்
Jarita C. Holbrook
பிறப்பு1965 (அகவை 58–59)
ஒனலுலு, அவாய்
துறைபண்பாட்டு வானியல், வானியல், வானியற்பியல்
பணியிடங்கள்
  • கலிபோர்னியா பல்கலைக்கழகம் (1998 - 2001, பட்டப்பின்)
  • அமெரிக்க நாவாய்க் கல்விக்கழகம் (ஆகத்து 1999 - நவம்பர் 1999, வருகைதரு)
  • கால்கேச்சு பல்கலைக்கழகம் (அக். 1998 - சன 1999) வருகைதரு
  • அரிசோனா பல்கலைக்கழகம்
  • வானியற்பியல் துறைக்கான மாக்சு பிளாங்கு நிறுவனம் (பட்டப்பின்)
  • வெசுட்டர்ன் கேப் பல்கலைக்கழகம் (தற்போது)
கல்வி
ஆய்வேடு2136, ஓரியன் Bn-Kl ஒற்றை, கொத்து விண்மீனாக்கத்தின் உட்கூறு, கட்டமைப்புக் கூறுபாடுகள் (1997)
ஆய்வு நெறியாளர்தாவீது எம். இராங்கு
அறியப்படுவது
விருதுகள்யூரி பரிசு (புரூக்ளின் திரைப்பட விழா)

யாரிதா சார்மியான் ஓல்புரூக் (Jarita Charmian Holbrook) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார், இவர்வெசுட்டர்ன் கேப் பல்கலைக்கழக இயற்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார். இங்கு இவர் வானியல் சமூக ஊடாட்டக் குழுவின் முதன்மை ஆய்வாளராக உள்ளார்.[1] இவரது பணி மாந்தருக்கும் இரவுநேர வானத்துக்கும் உள்ள ஊடாட்ட உறவை ஆய்கிறது. இவர் பண்பாட்டு வானியலிலும் விண்மீன் வெடிப்பு பால்வெளிகளிலும் விண்மீனாக்க களங்களிலும் ஆய்வு செய்து பல அறிவியல் வெளியீடுகளை வெளியிட்டுள்ளார்.[2][3][4]

இளமையும் கல்வியும்

[தொகு]

இவர் அவாயில் உள்ள ஓனலுலுவில் 1965 இல் பிறந்தார். இவர் கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னார்தினோவிலும் இலாசு ஏஞ்சலீசிலும் வளர்ந்துள்ளார். இவர் கல்வியாளர் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது தாத்தா, பாட்டி ஆகிய ஜேம்சும் மேரி ஓல்புரூக்கும் அல்கார்ன் மாநிலப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஆவர். இவரது அத்தை எடுனா ஓல்புரூக் ஜாக்சன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் துறை உதவிப் பேராசிரியர் ஆவார். இவரது பெற்றோர் இருவரும் அறிவியலில் பட்டம் பெற்றவர்கள்.[5][6]

ஓல்புரூக் கால்டெக் எனும் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் இய்ற்பியல் படித்து 1987 இல் இளம் அறிவியல் பட்டத்தைப் பெற்றார். அறிவியல் இளவல் பட்டம் பெற்றதும், பிஜியத் இராட்டு நேவுலா தொடக்கநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகி, அப்போது அமைதிப்படைத் தொண்டு பயிற்சியும் பெற்றார்.[5][7] பிறகு இவர் சாந்தியாகோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் தன் இயற்பியல் கலவியைத் தொடர்ந்து வானியலில் 1992 இல் மூதறிவியல் பட்டம் பெற்றார். மூதறிவியல் பட்டத்தை முடித்ததும், நாசா கோடார்டு விண்வெளி மையத்தில் பணிபுரிந்தார்.[8] இவர் ஓரியன், ஜி.எல் 2136 ஒண்முகில்களை அகச்சிவப்புக் கதிர் நெடுக்கத்தில் அவற்றின் விண்மீனாகத் திறமை பற்ரிய ஆய்வை மேற்கொண்டு, சாந்தா குரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானியலிலும் வானியற்பியலிலும் முனைவர் பட்டத்தை 1997 ஆம் ஆண்டில் பெற்றார்.[1]

வாழ்க்கைப்பணி

[தொகு]

முனைவர் பட்டம் பெற்றதும், ஓல்புரூக் தன் ஆய்வை பண்பாட்டு வானியல் எனும் பல்புலத் துறையில் மேற்கொள்ளலானார். இவர் ஆப்பிரிக்கப் பிறந்தக வானியலுக்கான அடித்தளத்தை கட்டமைக்கத் தொடங்கிவிட்டார். அத்துறை சார்ந்த ஆராய்ச்சிக்கு ஊக்கம் தந்து வளர்த்தெடுத்தார்.[9][10]

தகைமைகள்

[தொகு]

இவர் 2008 ஆம் ஆண்டில் ஐரோப்பியப் பண்பாட்டு வானியல் கழகத்தின் துணைதலைவராக இருந்துள்ளார்.[11]

பரப்புரை

[தொகு]

இவர் பல அறிவியல் திரைப்படங்களுக்கு உரையெழுதி, இயக்கி, அவற்றில் நடித்தும் உள்ளார். அவற்றில் Black Suns: An Astrophysics Adventure (2017), SKA ≥ Karoo Radio Telescope (2016), and Hubble's Diverse Universe (2009) ஆகியன உள்ளடங்கும்.[5][12][13][14][15]

இவர் வானியலிலும் அறிவியலிலும் மகளிரும் சிறுபான்மையினரும் முன்னேற பாடுபடுகிறார்.[16][17]

சொந்த வாழ்க்கை

[தொகு]

ஓல்புரூக் முன்னாள் வகுப்புத் தோழரும் உடன்பணிபுரிபவருமான உரோமீல் தவேவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Jarita Holbrook". University of the Western Cape Astrophysics (in ஆங்கிலம்). Archived from the original on 2018-11-12. பார்க்கப்பட்ட நாள் 2018-11-09.
  2. Holbrook, J. C.; Temi, P. (1998-03-20). "An Analysis of the Infrared Reflection Nebula and Circumstellar Environment of GL 2136". The Astrophysical Journal 496 (1): 280–291. doi:10.1086/305369. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-637X. Bibcode: 1998ApJ...496..280H. 
  3. Holbrook, Jarita; Heap, Sara; Malumuth, Eliot; Shore, Steven; Waller, Bill (1994), Mass-Transfer Induced Activity in Galaxies, Cambridge University Press, pp. 109–110, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/cbo9780511564789.021, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780511564789
  4. Kastner, Joel H.; Weintraub, David A.; Aspin, C. (April 1992). "The Juggler - A three-lobed near-infrared reflection nebula toward CRL 2136 = OH 17.6 + 0.2". The Astrophysical Journal 389: 357. doi:10.1086/171210. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-637X. Bibcode: 1992ApJ...389..357K. 
  5. 5.0 5.1 5.2 5.3 Roberson, Stephen. "Jarita Holbrook". www.nsbp.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-09.
  6. "Jackson State University | Department of Mathematics & Statistical Sciences | Ms. Edna L. Holbrook". www.jsums.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-09.
  7. "AAAS Fellows Biographies". National Science Foundation (in ஆங்கிலம்). Archived from the original on 2018-11-11. பார்க்கப்பட்ட நாள் 2018-11-09.
  8. Sasso, Anne (2007-06-01). "Jarita Holbrook: Guiding Star" (in en). Science | AAAS. https://www.sciencemag.org/careers/2007/06/jarita-holbrook-guiding-star. 
  9. Holbrook, Jarita C.; Urama, Johnson O.; Medupe, R. Thebe (2008). Holbrook, Jarita C.; Urama, Johnson O.; Medupe, R. Thebe (eds.). African Cultural Astronomy (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Vol. 6. Bibcode:2008ASSP....6.....H. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-4020-6639-9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-6638-2. {{cite book}}: |journal= ignored (help)
  10. Jarita, Holbrook (2016). "Astronomy, Indigenous Knowledge and Interpretation: Advancing studies of Cultural Astronomy in South Africa" (in en). Journal of Astronomy in Culture 1 (1). https://escholarship.org/uc/item/7jg3m3z9. 
  11. Harrison, Jeff (15 October 2008). "UA Astrophysicist Named to Cultural Organization" (in en). UANews. https://uanews.arizona.edu/story/ua-astrophysicist-named-to-cultural-organization. 
  12. "Jarita Holbrook". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2018-11-09.
  13. "Black Sun: Documentary Film about the 2012 Solar Eclipses". Kickstarter (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-09.
  14. Harrison, Jeff (6 July 2009). "UA Scientists' Film Chronicles Minority Astronomers" (in en). UANews. https://uanews.arizona.edu/story/ua-scientists-film-chronicles-minority-astronomers. 
  15. "'Black Suns' captures rare solar eclipse images". WHYY (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-10.
  16. C., Holbrook, J. (2012-04-01). Survival Strategies for African American Astronomers and Astrophysicists. Bibcode:2012opsa.book..173H. இணையக் கணினி நூலக மைய எண் 816431869.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  17. Diane, Murillo, Luis Felipe R. Traweek, Sharon HolBrooks, Jarita Guillen, Reynal Gu (2012-01-15). Studying Structures of Inequality in Astronomy Through Narrative Analysis and Social Network Visualization. eScholarship, University of California. இணையக் கணினி நூலக மைய எண் 1034798905.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புகள்

[தொகு]