யாருடா மகேஷ்

யாருடா மகேஷ்
இயக்கம்ஆர். மதன் குமார்
தயாரிப்புஆர். மதன் குமார், அந்தோணி நவாஸ், சத்ய நாராயணன்.
திரைக்கதைஆர். மதன் குமார்
இசைகோபி சுந்தர்
நடிப்புசுதீப் கிஷன்
டிம்பிள் சொபாடே
ஒளிப்பதிவுராணா
வெளியீடு26 ஏப்ரல் 2013
நாடுஇந்தியா
மொழிதமிழ்

யாருடா மகேஷ் (Yaaruda Mahesh) திரைப்படம் 2013-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஆர். மதன் குமார் இயக்கினார். இத்திரைப்படத்தில் சுதீப் கிஷன், டிம்பிள் சொபாடே மற்றும் பலர் நடித்துள்ளனர். சென்னை மற்றும் கேரளா சுற்றி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 26 ஏப்ரல் அன்று வெளியான இப்படம் ஒரு சுமாரான படம் என்ற விமர்சனத்தை பெற்றது. வசூலும் சராசரியாகவே அமைந்தது. பின்னர், மஹேஷ் என்ற பெயரில் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்தது.

நடிகர்கள்

[தொகு]
  • சுதீப் கிஷன் - சிவா
  • டிம்பிள் சொபாடே - சிந்தியா
  • ஜெகன் - வசந்த்
  • ஸ்ரீநாத் -ராண்டி
  • ரோபோ சங்கர் - கோபால்
  • வெங்கட் சுந்தர் - மிலிட்டரி
  • லிவிங்ஸ்டன்
  • சிங்கமுத்து
  • உமா பத்மநாபன்
  • ஸ்வாமிநாதன்
  • அஜித் குமார்
  • நெல்லை சிவா
  • ஸ்னேஹா ரமேஷ்
  • சனா ஓப்ராய்

கதைச்சுருக்கம்

[தொகு]

தேர்வு எழுத கல்லூரி செல்லும் சிவாவின் பேனா மை காலியாவதிலிருந்து படம் துவங்குகிறது. தேர்வில் சிவாவிற்கு அருகில் அமர்ந்திருக்கும் சிந்தியா (டிம்பிள் சொபாடே) அவனக்கு பேனா கடனாக தருகிறாள். உடனே அவள் வசம் காதல் வயப்பட்டு சிந்தியாவை பின்தொடருகிறான். அந்நிலையில், சிவா, சிந்தியா, வசந்த் மற்றும் அவனது காதலி பிரியா ஆகியோர் சுற்றுலா ஒன்றிற்கு செல்கிறார்கள். சிந்தியாவும் சிவாவை காதல் செய்கிறாள். பின்னர், அவள் முதல் மதிப்பெண் பெற்று ஊக்கத்தொகையுடன் அமெரிக்கா செல்ல போகிறாள் என்று சிவாவிற்கு தெரியவருகிறது. அவள் விடைபெறுவதற்கு முன்னால், தன் வீட்டில் யாரும் இல்லாத பொழுது காலை சிற்றுண்டி சாப்பிட சிவாவை அழைக்கிறாள். பின்னர் சிந்தியா அமெரிக்கா சென்றுவிடுகிறாள். மூன்று மாதங்களுக்கு பின் திரும்பிய சந்தியா, சிவாவிடம் ஒரு ரகசியம் இருப்பதாக கூறுகிறாள். சிவா தனியாக இருக்கிறான் என்று எண்ணி தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்கிறாள். இதனை கேட்ட சிவாவின் பெற்றோர் சிவாவை கடுமையாக திட்டுகிறார்கள்.

சில ஆண்டுகள் கழிய, சிவாவிற்கும் சிந்தியாவிற்கும் திருமணமாகி ஒரு குழந்தையுடன் வாழ்வதாக படம் நகர்கிறது. சிந்தியா வேலைக்கு செல்வதால், குழந்தையை வீட்டிலேயே இருந்து பார்த்துக்கொள்கிறான் சிவா. சிவாவின் அண்ணன் ராண்டி ஒரு மனநல மருத்துவர். பொறுப்பில்லாமல் இருக்கும் சிவாவிற்கு பொறுப்பு வருவதற்காக ராண்டி சிவாவை ஒரு சூழ்ச்சியில் சிக்கவைக்கிறார். சிவாவின் குழந்தை அவனுக்கு பிறக்கவில்லை என்றும், அந்த குழந்தையின் தந்தை யாரோ ஒரு மகேஷ் என்றும் ராண்டியும் சிந்தியாவும் நாடகமாடி நம்பவைக்கிறார்கள். அதிர்ந்துபோன சிவா, மகேஷ் யாரு என்று கண்டுபிடிக்க ஆர்வம் ஏற்பட்டு தன் நண்பன் வசந்தின் உதவியுடன் நூலகம் வாயிலாக தகவல் சேகரிக்கிறான். மகேஷ் யார் என்று எவ்வாறு சிவா கண்டுபிடிக்கிறான் என்பதே மீதி கதை ஆகும்.

இசை

[தொகு]

இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் கோபி சுந்தர் ஆவார்.

வரிசை

எண்

பாடல் பாடகர்கள்
1 யாருடா அந்த மகேஷ் கோபி சுந்தர், கத்ரீனா
2 புது பார்வை ஹரிச்சந்திரன், ப்ரியா ஹிமேஷ்
3 வயதை கெடுத்து கத்ரீனா, சுச்சித் சுரேஷன்
4 ஓடும் உனக்கிது கத்ரீனா, சுச்சித் சுரேஷன்
5 ஏமாந்திட முகேஷ், கோபி சுந்தர்
6 உயிரே உயிரில் கோபி சுந்தர்

வெளியீடு

[தொகு]

இந்த திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமம் சன் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டது. இந்திய தணிக்கைக் குழு இப்படத்திற்கு "ஏ" சான்றிதழ் வழங்கியது. 26 ஏப்ரல் 2013 அன்று 72 திரைகளில் இப்படம் வெளியானது.

வசூல்

[தொகு]

முதல் வார இறுதியில் சென்னை பாக்ஸ் ஆபீஸில் 90 காட்சிகள் திரையிடப்பட்டன. உலகளாவிய அளவில் இப்படம் 8 கோடி ரூபாய் வசூல் செய்தது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.behindwoods.com/tamil-movie-news-1/dec-12-01/yaaruda-mahesh-r-madhan-kumar-01-12-12.html
  2. http://www.behindwoods.com/tamil-movies/yaaruda-mahesh/yaaruda-mahesh-box-office-apr-28.html
  3. http://timesofindia.indiatimes.com/entertainment/yaaruda-mahesh/movie-review/19751973.cms
  4. http://www.newindianexpress.com/entertainment/review/2013/may/04/Yaaruda-Mahesh-Interesting-in-partsdisappointing-as-a-whole-474218.html
  5. http://www.behindwoods.com/tamil-movies/yaaruda-mahesh/yaaruda-mahesh-review.html
  6. http://www.behindwoods.com/tamil-movies/yaaruda-mahesh/yaaruda-mahesh-songs-review.html

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. https://www.imdb.com/title/tt4418232/