யுன்னான் மூங்கில் குழிவிரியன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | விவிபேரிடே
|
பேரினம்: | திரிமெரெசுரசு
|
இனம்: | தி. யுன்னானென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
திரிமெரெசுரசு யுன்னானென்சிசு சிமிட், 1925 | |
வேறு பெயர்கள் | |
|
யுன்னான் மூங்கில் குழிவிரியன்[4] (Yunnan bamboo pitviper) என்று பொதுவாக அழைக்கப்படும் திரிமெரெசுரசு யுன்னானென்சிசு (Trimeresurus yunnanensis) சீனாவில் மட்டும் காணப்படும் நச்சுப் பாம்புச் சிற்றினமாகும்.[5]
யுன்னான் மூங்கில் குழிவிரியன் முதுகுப்பகுதியின் நடுவில் 19 (அல்லது 21) வரிசை முதுகெலும்பு செதில்களைக் கொண்டுள்ளது. ஆண் பாம்புகளில் 154 முதல் 164 வரையிலும் பெண் பாம்புகளில் 150 முதல் 172 வயிற்றுப்புறச் செதில்கள் மற்றும் ஆண் பெண் பாம்புகளில் முறையே 61-71/52-65 பக்க-வால் செதில்கள் ஆகியவை காணப்படும்.[4]
யுன்னான் மூங்கில் குழ்விவிரியன் தெற்கு சீனாவில் (யுன்னான் மற்றும் தென்மேற்கு சிச்சுவான்) காணப்படுகிறது.[3] கொடுக்கப்பட்ட வட்டார வகை "டெங்யுயே, யுன்னான் மாகாணம், சீனா" (நானூர் டெங்சோங் கவுண்டி).[4]
சாகோ (1995) இந்த வகைப்பாட்டை ஒரு முழுச் சிற்றினத்தின் நிலைக்கு தி. யுன்னானென்சிசு என உயர்த்தினார்.[4]