இனங்காட்டிகள் | |
---|---|
12039-14-4 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 131700999 |
| |
பண்புகள் | |
US2 | |
வாய்ப்பாட்டு எடை | 302.160 கி/மோல் |
தோற்றம் | கருப்பு நிறப் படிகங்கள் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணப் படிகம் (α-US2) |
புறவெளித் தொகுதி | P4/ncc (No. 130) |
Lattice constant | a = 1029.3 பைக்கோமீட்டர், c = 637.4 பைக்கோமீட்டர் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யுரேனியம் இருசல்பைடு (Uranium disulfide) என்பது US2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் யுரேனியம் +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் ஆக்சிசன் -2 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் காணப்படுகின்றன. கதிரியக்கப் பண்பு கொண்டுள்ள இச்சேர்மம் கருப்பு நிறப் படிகங்களாகக் காணப்படுகிறது.[1]
யுரேனியம் இருசல்பைடு இரண்டு புற வேற்றுமை வடிவங்களில் காணப்படுகிறது. α-யுரேனியம் இருசல்பைடு, β-யுரேனியம் இருசல்பைடு என்பன இவ்விரண்டு வடிவங்களாகும். α-யுரேனியம் இருசல்பைடு 1350 பாகை செல்சியசு வெபநிலைக்கு மேல் நிலைப்புத்தன்மையுடனும் அதற்கு கீழான வெப்பநிலையில் சிற்றுறுதி நிலைப்புத்தன்மையும் கொண்டுள்ளது.[2] இவடிவத்தில் காணப்படும் நாற்கோணப் படிக வடிவம் யுரேனியம் இருசெலீனைடின் கட்டமைப்பை ஒத்து உள்ளது. 1350 பாகை செல்சியசு வெபநிலைக்கு கீழான வெப்பநிலையில் β-யுரேனியம் இருசல்பைடு நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது..[3]
உயர்ந்த வெப்பநிலையில் யுரேனியம் உலோகப் பொடியுடன் வாயு நிலை ஐதரசன் சல்பைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் குறைத்தல் வினை நிகழ்ந்து யுரேனியம் இருசல்பைடு உருவாகிறது.[4]