பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
யுரேனியம் கார்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12070-09-6 | |
பண்புகள் | |
UC | |
வாய்ப்பாட்டு எடை | 250.04 கிராம்/மோல் |
அடர்த்தி | 13.63 கிராம்/செ.மீ3 |
உருகுநிலை | 2,350 °C (4,260 °F; 2,620 K)[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம், cF8 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யுரேனியம் கார்பைடு (Uranium carbide) என்பது UC என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எளிதில் உருகாத கடினமான பீங்கான் பொருளான இது வெவ்வேறு விகிதவியல் அளவுகளில் (UCx) உருவாகிறது. யுரேனியம் மெத்தேனைடு (UC, சிஏஎசு எண் 12070-09-6) , யுரேனியம் செசுகியுகார்பைடு (U2C3, சிஏஎசு எண் 12076-62-9)[2], யுரேனியம் அசிட்டைலைடு (UC2, சிஏஎசு எண் 12071-33-9)[3] போன்றவை உதாரணங்களாகும். யுரேனியம் கார்பைடு 2350 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகுகிறது[4].
யுரேனியம் டையாக்சைடு மற்றும் சில யுரேனியம் சேர்மங்கள் போல யுரேனியம் கார்பைடையும் வழக்கம் போல சிறுசிறு குண்டுகளாகவும் மாத்திரைகளாகவும் அணுக்கரு உலைகளுக்கான அணுக்கரு எரிபொருளாகப் பயன்படுத்த இயலும். அணுக்கரு வெப்ப ராக்கெட்டு வடிவமைப்புகளில் யுரேனியம் கார்பைடு பயன்படுத்தப்படுகிறது.
யுரேனியம் கார்பைடு மாத்திரை எரிபொருள் உட்கரு அமெரிக்க கூழாங்கல் படுகை வகை அணுக்கரு உலைகளில் பயன்படுத்தப்படுகிறது. செருமனியின் அணுக்கரு உலைகளில் யுரேனியம் டையாக்சைடு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியம் கார்பைடை ஒரு அணுக்கரு எரிபொருளாகத் தனித்தும் பயன்படுத்த இயலும். அல்லது புளூட்டோனியம் கார்பைடுடன் சேர்த்தும் (PuC மற்றும் Pu2C3) யுரேனியம் –புளூட்டோனியம் கார்பைடு கலவையாகவும் பயன்படுத்தலாம்.
துகள் முடுக்கிகளை இலக்காகக் கொண்டும் யுரேனியம் கார்பைடு பிரபலமடைந்து வருகிறது. நைட்ரசன், ஐதரசன் ஆகியனவற்றைப் பயன்படுத்தி அமோனியா தயாரிக்கவும் சிலசமயங்களில் யுரேனியம் கார்பைடு வினையூக்கியாகப் பயன்படுகிறது[5].