இனங்காட்டிகள் | |
---|---|
13775-16-1 | |
பப்கெம் | 139592 |
பண்புகள் | |
UBr5 | |
வாய்ப்பாட்டு எடை | 637.549 கி/மோல் |
தோற்றம் | அடர் பழுப்பு, நீருறிஞ்சும் படிகத் திண்மம் |
சிதைவடையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யுரேனியம் பெண்டாபுரோமைடு (Uranium pentabromide) என்பது U2Br10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
தனிமங்கள் இரண்டையும் அசிட்டோநைட்ரைல் கரைப்பானில் கரைத்து வினைபுரியச் செய்தால் யுரேனியம் பெண்டாபுரோமைடு உருவாகும். அல்லது புரோமினை யுரேனியம் உலோகம் அல்லது யுரேனியம் டெட்ராபுரோமைடைச் சேர்த்து 55 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு (131 பாரங்கீட்டு அல்லது 328 கெல்வின் வெப்பநிலை) சூடுபடுத்தினாலும் யுரேனியம் பெண்டாபுரோமைடு உருவாகிறது.[1]
யுரேனியம் பெண்டாபுரோமைடு நீருறிஞ்சும் தன்மை கொண்டதாகும். பெரும்பாலான கரிம கரைப்பான்களில் இது சிதைவடையும். அடர் பழுப்பு நிறத்தில் திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. அசிட்டோநைட்ரைல் அல்லது இருகுளோரோமெத்தேன் இதற்கு விதிவிலக்காகும்.[1] யுரேனியம் பெண்டாபுரோமைடு நிலைப்புத்தன்மையற்றடாக உள்ளதால் சுத்திகரிப்பதற்கும் முடிவதில்லை.[2] 80 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது சிதைவடைந்து யுரேனியம் மற்றும் புரோமைடாக மாறுகிறது.[3] இதன் படிக அமைப்பு β-UCl5 சேர்மத்தை ஒத்துள்ளது. இது முச்சாய்வு சரிவச்சு கட்டமைப்பும் U2Br10 இருபடிகளையும் கொண்டுள்ளது.[4]
UBr5L வடிவத்தின் நிலையான அணைவுகள் முப்பீனைல்பாசுபீன் ஆக்சைடு மற்றும் அறுமெத்தில்பாசுபோரமைடு போன்ற ஈந்தணைவிகளுடன் அறியப்படுகின்றன. மேலும் யுரேனியம் டெட்ராபுரோமைடு (UBr4) சேர்மத்தை புரோமினேற்றம் செய்வதன் மூலம் விரும்பிய ஈந்தணைவியை முன்னிலைப்படுத்தியும் பெறப்படுகின்றன.[2] கூடுதலாக UBr5 சேர்மத்துடன் தயோனைல் புரோமைடில் கரைக்கப்பட்ட ஒற்றை இணைதிற புரோமைடை சேர்த்து வினைபுரியச் செய்தால் அறுபுரோமோயுரேனேட்டு(V) உப்பு கிடைக்கிறது.:[1]