UOB Plaza | |
| |
தகவல் | |
---|---|
அமைவிடம் | ராபிள்ஸ் இடம், நகர மையம், சிங்கப்பூர் |
நிலை | பயன்பாட்டில் உள்ளது |
பயன்பாடு | அலுவலகங்கள் |
உயரம் | |
கூரை | 280 மீ, 919 அடி (பிளாசா ஒன்று); 162 மீ, 531 அடி (பிளாசா இரண்டு) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 66 (பிளாசா ஒன்று); 38 (பிளாசா இரண்டு) இவற்றுடன் மூன்று நிலக்கீழ்த் தளங்கள் |
தளப் பரப்பு | 454,560 ச.அடி |
நிறுவனங்கள் | |
கட்டிடக்கலைஞர் | கென்சோ டாங்கே அசோசியேட்ஸ் மற்றும் ஆர்க்கிடெக்ட்ஸ் 61 (பிளாசா ஒன்று, பிளாசா இரண்டு மீளமைப்பு) ஆர்க்கிடெக்ட்ஸ் டீம் 3 (பிளாசா இரண்டு முதல் வடிவமைப்பு) |
ஒப்பந்தகாரர் | நிசிமாட்சு கான்ஸ்ட்ரக்சன் - லம் சாங் JV |
Developer | யுனைட்டட் ஓவர்சீஸ் வங்கி |
உரிமையாளர் | யுனைட்டட் ஓவர்சீஸ் வங்கி |
முகாமை | யுனைட்டட் ஓவர்சீஸ் வங்கி சொத்து மேலாண்மை பிரைவேட் லிட். |
யூ.ஓ.பி பிளாசா என்பது சிங்கப்பூர் நகரத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத் தொகுதி ஆகும். இதில் பிந்திய நவீனத்துவப் பாணியில் வடிவமைக்கப்பட்ட இரண்டு வானளாவிகள் அடங்குகின்றன. இவ்விரு வானளாவிகளும் யூ.ஓ.பி பிளாசா ஒன்று, யூ.ஓ.பி பிளாசா இரண்டு எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இவற்றுள் "யூ.ஓ.பி பிளாசா ஒன்று", சிங்கப்பூர் நகரத்தில் உள்ள மூன்று மிக உயர்ந்த கட்டிடங்களுள் ஒன்று. ஓ.யு.பி மையம், குடியரசு பிளாசா என்பன ஏனைய இரண்டு வானளாவிகள். "யூ.ஓ.பி பிளாசா இரண்டு" ஒப்பீட்டளவில் முதலாவதிலும் உயரங் குறைந்ததும், காலத்தால் முந்தியதும் ஆகும். 1973 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வானளாவி, பிந்திய கட்டிடத்தின் முகப்புக்குப் பொருத்தமாக அமையும்படி 1995 ஆம் ஆண்டில் திருத்தி அமைக்கப்பட்டது. இக் கட்டிடம் 1995 ஆம் ஆண்டில் அக்காலத்தில் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ குவான் யூவினால் திறந்து வைக்கப்பட்டது.
1992 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட 67 தளங்களைக் கொண்ட இக் கட்டிடம் 280 மீட்டர்கள் உயரமானது. இதில், "யுனைட்டட் ஓவர்சீஸ் வங்கி" , முக்கிய நிதி நிறுவனங்களான யு.பி.எஸ் போன்றவை தமது தலைமையகத்தை அமைத்துள்ளன. இதன் 60 ஆவது தளத்தில் ஒரு உணவகம் உள்ளது. இந்த வானளாவி, அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சலீசில் உள்ள யு.எஸ் வங்கிக் கட்டிடத்தின் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி வடிவமைக்கப்பட்டது.
இதன் நிலக்கீழ்த் தளத்தில், மௌலானா முகமது அலி மசூதி என அழைக்கப்படும் மசூதி ஒன்றும் அமைந்துள்ளது. நிலத்தின் கீழ் அமைந்திருப்பதால் இது ஒரு தனித்துவம் வாய்ந்த மசூதியாகக் கருதப்படுகிறது. எனினும், சில முஸ்லிம்கள் இது விதிகளுக்கு மாறானது என்று கருதுவதால் இம் மசூதி சர்ச்சைக்கு உரிய ஒன்றாகவும் உள்ளது. "மஜ்லிஸ் உகமா இசுலாம் சிங்கப்பூரா" என்னும் அமைப்பினால் நடத்தப்படும் இம் மசூதி, ராபிள்ஸ் இடத்தில் அமைந்த முதலாவது மசூதியும் ஆகும்.
162 மீட்டர் உயரமான இந்தக் கோபுரம் 38 தளங்களைக் கொண்டது. 1973 ஆம் ஆண்டில் முதலில் கட்டப்பட இக் கட்டிடம், 1995 ஆம் ஆண்டில் திருத்திக் கட்டப்பட்டது. இக் கட்டிடம் இருக்கும் இடத்தில் முன்னர் "பொன்காம் கட்டிடம்" என அழைக்கப்பட்ட கட்டிடத்தின் ஒரு அக் காலத்தில் யுனைட்டட் சைனீஸ் வங்கி பயன்படுத்தி வந்தது. இந்த வங்கியே பின்னர் யுனைட்டட் ஓவர்சீஸ் வங்கி என 1965 ஆம் ஆண்டில் பெயர் மாற்றப்பட்டது. பின்னர் இந்த மூன்று மாடிக் கட்டிடம் இடிக்கப்பட்டு யூ.ஓ.பி பிளாசா இரண்டு கட்டப்பட்டது.