நிறுவுகை | 6 சனவரி, 1943 |
---|---|
தலைமையகம் | கல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
முதன்மை நபர்கள் | அருண் கவுல் (தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்) |
தொழில்துறை | வங்கித்தொழில், நிதி சேவைகள் |
உற்பத்திகள் | நுகர்வோர் வங்கி, வணிக வங்கி, நிதி மற்றும் காப்பீடு, முதலீட்டு வங்கி, அடமானங்கள், தனிநபர் வங்கி, வள மேலாண்மை |
இலாபம் | ▲ ₹ 2510 கோடிகள் (2014ஆம் ஆண்டில்) |
உரிமையாளர்கள் | இந்திய அரசு |
பணியாளர் | 24,109 (2013ஆம் ஆண்டில்) |
இணையத்தளம் | www |
யூகோ வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். இது 1943ஆம் ஆண்டில் யுனைடெட் கமர்சியல் வங்கி என்னும் பெயரில் கல்கத்தாவில் தொடங்கப்பட்ட வங்கியாகும். 2013 சூன் 1 அன்றைய நிலவரப்படி, 4000 சேவை மையங்களையும் 44 மண்டல அலுவலகங்களையும் கொண்டு இவ்வங்கி இந்தியா முழுவதும் சிறப்பாக செயலாற்றி வருகிறது. மேலும் இவ்வங்கிக்கு ஆங்காங் மற்றும் சிங்கப்பூரில் இரு அயல்நாட்டுக் கிளைகளும் செயல்படுகின்றன.[1][2][3]
2013-14 நிதியாண்டில் இவ்வங்கியானது ரூபாய் 4550 பில்லியன் அளவிலான வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2014ஆம் ஆண்டைய தரவின்படி, போர்ப்ஸ் உலகளாவிய சிறந்த 2000 வங்கிகளின் பட்டியலில் இவ்வங்கிக்கு 1860ஆவது இடம் கிடைத்தது.