யூடித் கமோரா கோகன் Judith Gamora Cohen | |
---|---|
பிறப்பு | 1946 [1] நியூயார்க் நகர் |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி, கிட் பீக் தேசிய வான்காணகம், கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | இராட்கிளிப் கல்லூரி, கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் |
ஆய்வு நெறியாளர் | குவிதோ முஞ்ச் |
அறியப்படுவது | கெக் வான்காணக வடிவமைப்பாளர்களில் ஒருவர் |
விருதுகள் | டியூடிலே வான்காணகத்தின் எர்னெசுட்டு எஃப். புல்லாம் விருது |
இணையதளம் https://www.pma.caltech.edu/content/judith-g-cohen and http://www.astro.caltech.edu/~jlc/ |
யூடித் கமோரா கோகன் (Judith Gamora Cohen) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் வானியல் துறைசார்ந்த கேட் வான் நூசு பேராசிரியராக உள்ளார்.
இவர் இராட்கிளிப் கல்லூரியில் கலை இளவல் பட்டமும் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் அரிசோனா பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளவல் பட்டமும் பெற்றுள்ளார். இவரது ஆராய்ச்சி விண்மீன்கள், பால்வெளிகளின் கட்டமைப்பும் படிமலர்ச்சியிலும் கெக் வான்காணகத்திற்கான கருவிகளை உருவாக்குதலிலும் அமைந்தது. இவரது ஆய்வு கால்டெக் மங்கிய பால்வெளி செம்பெயர்ச்சி அளக்கைத் திட்டத்தை வகுக்க வழிகோலியது. [2] இவர் 200 அளவுக்கும் மேலாக ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.[3]
இவர் தகவுறு கரோலின் எர்ழ்செல் விரிவுரையை விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்திலும் தகவுறு சிசிலியா பேய்னே கொபாசுச்கின் விரிவுரையை ஆர்வார்டு பல்கலைக்கழக வானியற்பியல் மையத்திலும் ஆற்றியுள்ளார்.
இவரது சில ஆய்வுகள் அச்சூடகத்தில் மக்கள்பரப்புக்கு எளிமையாக வெளியிடப்பட்டன. இவர் கெக் வான்காணகத்தில் ஒருங்கொளி வழிகாட்டும் தகவமைவு ஒளியியல் முறைவழி, ஆந்திரமேடாவைச் செறிவாகச் சுற்றிவரும் பல விண்மீன் கொத்துகள் உண்மையில் கொத்துகளே அல்ல விளக்கிக் காட்டினார்.[4] இவரும் ஏவான் கிர்பியும் இணைந்து அருகில் உள்ள டிரையாங்குலம் எனும் குறும்பால்வெளி அதிலமைந்த கட்புலனாகும் விண்மீன்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது கூடுதலான பொருண்மையைப் பெற்றுள்ளதால் இது கரும்பொருண்மப் பால்வெளிக்கு எடுத்துகாட்டு வகையாகும் என நிறுவியுள்ளனர்.[5][6]
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)