யூனிசு டி சூசா (Eunice de Sousa 1940 -2017) என்பவர் இந்திய ஆங்கிலப் பெண் எழுத்தாளர் ஆவார். ஆங்கிலக் கவிஞர், புதின ஆசிரியர், இலக்கியத் திறனாய்வாளர் எனவும் மதிக்கப்பட்டவர்.
புனே நகரில் பிறந்து வளர்ந்த யூனிசு டி சோசா கோவன் கத்தோலிக்க மரபைச் சேர்ந்தவர். [1]அமெரிக்காவின் வின்கான்சின் மார்க்கட் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்தார். மும்பை பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்து ஆங்கிலம் கற்பித்தார். ஒய்வு பெறும் காலம் வரை அந்தக் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராக இருந்தார். கல்லூரியில் இலக்கியத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தினார். நாடகங்களில் இயக்குநராகவும் நடிகையாகவும் பங்களித்தார்.2001 இல் புதினங்கள் எழுதத் தொடங்கினார். குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதினார். மும்பை மிர்ரர் இதழில் கட்டுரைகள் எழுதி வந்தார். [2] பழம் நூல்களைத் தொகுப்பதிலும் ஆர்வம் காட்டினார். 2017 சூலைத் திங்கள் 29 இல் காலமானார்.