![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
யூரோப்பியம்(II) ஆக்சைடு
| |
வேறு பெயர்கள்
யூரோப்பியம் மோனாக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12020-60-9 ![]() | |
ChemSpider | 24725041 |
EC number | 234-660-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 18439542 |
| |
பண்புகள் | |
EuO | |
வாய்ப்பாட்டு எடை | 167.963 கிராம்/மோல் |
தோற்றம் | ஊதா நிறப்படிகங்கள்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யூரோப்பியம்(II) ஆக்சைடு (Europium(II) oxide) என்பது EuO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மாகும். யூரோப்பியம் தனிமத்தின் ஆக்சைடுகளுள் ஒன்றான இதனுடன் யூரோப்பியம்(III) ஆக்சைடு மற்றும் கலப்பு இணைதிறன் யூரோப்பியம் (II, III) ஆக்சைடு ஆகிய ஆக்சைடுகளும் அறியப்படுகின்றன.
யூரோப்பியம்(III) ஆக்சைடை தனிமநிலை யூரோப்பியத்துடன் சேர்த்து 800 °செல்சியசு வெப்பநிலையில் ஒடுக்க வினைக்கு உட்படுத்தி தொடர்ந்து 1150 °செல்சியசு வெப்பநிலையில் வெற்றிட வடிகட்டுதல் மூலம் யூரோப்பியம்(II) ஆக்சைடைத் தயாரிக்கலாம்.[2]
யூரோப்பியம் ஆக்சிகுளோரைடுடன் இலித்தியம் ஐதரைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் யூரோப்பியம்(II) ஆக்சைடு உருவாகும்.[3]
நவீன ஆராய்ச்சியில், யூரோப்பியம் அணுக்கள் மற்றும் ஆக்சிசன் மூலக்கூறுகளிலிருந்து நேரடியாக புறமூலக்கூறு கற்றைப்படிதல் மூலம் மெல்லிய படலங்களை உருவாக்க முடியும். இந்த படலங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான Eu3+ மாசுபாடு உள்ளது.[4][5]
யூரோபியம்(II) ஆக்சைடு படிகமாக இருக்கும்போது ஓர் ஊதா நிற சேர்மமாகவும் மெல்லிய படல வடிவில் இருக்கும்போது வெளிப்படையான நீலமாகவும் உள்ளது. ஈரப்பதமான வளிமண்டலத்தில் இது நிலையற்றது. மெதுவாக மஞ்சள் யூரோப்பியம்(II) ஐதராக்சைடாகவும், பின்னர் வெள்ளை யூரோப்பியம்(III) ஐதராக்சைடாகவும் மாறுகிறது.[3] EuO ஒரு கனசதுர சோடியம் குளோரைடு கட்டமைப்பில் a = 0.5144நானோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருவுடன் படிகமாகிறது. யூரோப்பியம்(II) ஆக்சைடு சேர்மம் பெரும்பாலும் விகிதவியலுக்கு ஒவ்வா அளவுகளில் 4% Eu3+ வரையும் சிறிய அளவிலான தனிம யூரோப்பியத்தையும் கொண்டிருக்கும்.[6]
யூரோப்பியம்(II) ஆக்சைடு 69.3 கெல்வின் கியூரி வெப்பநிலையுடன் பெர்ரோ காந்தத்தன்மை கொண்டுள்ளது. சுமார் 5-7% தனிம யூரோப்பியம் சேர்க்கப்படுவதால், இது 79 கெல்வின் வெப்பநிலைக்கு அதிகரிக்கிறது. கியூரி வெப்பநிலைக்குக் கீழே கடத்துத்திறனில் வியத்தகு அதிகரிப்புடன், மிகப்பெரிய காந்த எதிர்ப்புத் திறனையும் காட்டுகிறது. கியூரி வெப்பநிலையை அதிகரிக்கும் மற்றொரு வழி கடோலினியம், ஓல்மியம் அல்லது இலந்தனம் ஆகியவற்றை கலப்பு செய்து அதிகரிக்கலாம்.[6]
யூரோப்பியம்(II) ஆக்சைடு 1.12 எலக்ட்ரான் வோல்ட்டு ஆற்றல் இடைவெளி கொண்ட ஒரு குறைக்கடத்தி ஆகும் [6]
யூரோப்பியம்(II) ஆக்சைடின் பண்புகள் காரணமாக, சிலிக்கானில் படிந்திருக்கும் ஆக்சைடின் மெல்லிய அடுக்குகள் சுழல் வடிகட்டிகளாகப் பயன்படுத்த ஆய்வு செய்யப்படுகின்றன. சுழல் வடிகட்டிப் பொருட்கள் ஒரு குறிப்பிட்ட சுழற்சியின் எலக்ட்ரான்களை மட்டுமே கடந்து செல்ல அனுமதிக்கின்றன, எதிர் சுழற்சியின் எலக்ட்ரான்களைத் தடுக்கின்றன.[7]