![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
யூரோப்பியம்(II) சல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12020-65-4 ![]() | |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82809 |
| |
பண்புகள் | |
EuS | |
வாய்ப்பாட்டு எடை | 184.03 கி/மோல் |
தோற்றம் | கருப்பு நிறத் தூள் |
உருகுநிலை | 2,250 °C (4,080 °F; 2,520 K) |
+25,730;·10−6 செ.மீ3/மோல் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யூரோப்பியம்(II) சல்பைடு (Europium(II) sulfide) என்பது EuS என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் காற்றில் நிலைப்புத்தன்மை கொண்ட தூளாக இது காணப்படுகிறது. யூரோப்பியம் சல்பைடில் யூரோப்பியம் +II என்ற ஆக்சிசனேற்ற நிலையைக் கொண்டுள்ளது. அதேசமயம் இலாந்தணைடுகள் ஒரு பொதுவான +III என்ற ஆக்சிசனேற்ற நிலையை வெளிப்படுத்துகின்றன.[1] யூரோப்பியம்(II) சல்பைடின் கியூரி வெப்பநிலை 16.6 கெல்வின் ஆகும். இந்த வெப்பநிலைக்குக் கீழே இது ஒரு ஃபெரோ காந்த சேர்மம் போல செயல்படுகிறது, மேலும் அதற்கு மேலான வெப்பநிலையில் எளிய பாரா காந்த பண்புகளை வெளிப்படுத்துகிறது.[2] EuS ஆனது ஆக்சிசனேற்றத்தின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும் போது, காற்றில் 500 °செல்சியசு வெப்பநிலை வரை நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. மந்தவாயுச் சூழலில் இது 1470 °செல்சியசு வெப்பநிலையில் சிதைகிறது.
யூரோப்பியம்(II) சல்பைடு பாறை உப்பு கட்டமைப்புடன் முகமைய கனசதுரம் (FCC) படிக அணிக்கோவையில் படிகமாகிறது. யூரோப்பியம் மற்றும் கந்தகம் இரண்டும் ஆறின் ஒருங்கிணைப்பு எண்ணுடன் எண்முக ஒருங்கிணைப்பு வடிவவியலைக் கொண்டுள்ளன.[3][4] Eu-S பிணைப்பின் பிணைப்பு நீளம் 2.41 Å. ஆகும்.
தூள் செய்யப்பட்ட யூரோப்பியம்(III) ஆக்சைடு (Eu2O3) சேர்மத்துடன் ஐதரசன் சல்பைடைச் சேர்த்து (H2S) 1150 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் யூரோப்பியம்(II) சல்பைடு உருவாகிறது. வினையில் உருவான கச்சா EuS சேர்மத்திலுள்ள அதிகப்படியான கந்தகத்தை அகற்ற வெற்றிடத்தின் கீழ் 900 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி சுத்திகரிக்கப்படுகிறது.[3][5]
EuS கூடுதலாக யூரோப்பியம் டைகுளோரைடிலிருந்து (EuCl2) தயாரிக்கப்பட்டது. இருப்பினும், அத்தகைய பொருட்கள் குளோரைடால் மாசுபடுத்தப்படுகின்றன.[3]
கடந்த சில தசாப்தங்களில், EuS மற்றும் இதன் ஆக்சிசன் ஒப்புமை EuO ஆகியவற்றின் தொகுப்பு, சீரொளி சாளரப் பொருட்கள், மின்காப்பு பெர்ரோ காந்தங்கள், பெர்ரோகாந்த குறைக்கடத்திகள் மற்றும் காந்தமண்டல எதிர்ப்பு, ஒளிகாந்த மற்றும் ஒளிரும் பொருட்கள் போன்ற திறன்களின் காரணமாக ஒரு புதிய ஆர்வத்தை ஈர்த்துள்ளது.[5][2] குவாண்டக் கணினியியலில் குவிட்களின் உற்பத்தி தொடர்பான மச்சோரானா பெர்மியன்களின் சான்றுகளை வழங்கும் ஒரு பரிசோதனையில் EuS பயன்படுத்தப்பட்டது.[6]