18-வது அமைச்சரவை - உத்தரப் பிரதேசம் | |
உருவான நாள் | 25 மார்ச் 2022 |
---|---|
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | யோகி ஆதித்தியநாத் |
துணை அரசுத் தலைவர் | பிரஜேஷ் பாதக் கேசவ் பிரசாத் மௌரியா |
நாட்டுத் தலைவர் | ஆனந்திபென் படேல் |
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை | 52 |
சட்ட மன்றத்தில் நிலை | 273 / 403 (உத்தரப் பிரதேச சட்டமன்றம்) |
எதிர் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
எதிர்க்கட்சித் தலைவர் | அகிலேஷ் யாதவ் |
வரலாறு | |
தேர்தல்(கள்) | 2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் |
Outgoing election | 2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் |
Legislature term(s) | 5 ஆண்டுகள் |
முந்தைய | யோகி ஆதித்தியநாத்தின் முதலாவது அமைச்சரவை |
யோகி ஆதித்தியநாத்தின் இரண்டாம் அமைச்சரவை 2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. 25 மார்ச் 2022 அன்று லக்னோவில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் 52 அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.[1][2][3]
முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்தின் தலைமையிலான இரண்டாம் அமைச்சரவையில் 2 துணை முதலமைச்சர்களும், 16 கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 14 இணை அமைச்சர்களும், 19 இணை அமைச்சர்களும் உள்ளனர்.[4]பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சிகளான அப்தனா தளம் மற்றும் நிசாத் கட்சிக்கு தலா ஒரு கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.