யோகேந்திர சிங் யாதவ்

சுபேதார் மேஜர்
Subedar Major

யோகேந்திர சிங் யாதவ்

யோகேந்திர சிங் யாதவ்
பிறப்பு10 மே 1980 (1980-05-10) (அகவை 44)[1]
புலந்தசகர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
சார்புஇந்தியா இந்தியக் குடியரசு
சேவை/கிளை இந்திய இராணுவம்
தரம் சுபேதார் மேஜர்
படைப்பிரிவு18-வது எறிகனை வீச்சாளர்கள் படையணி
போர்கள்/யுத்தங்கள்கார்கில் போர்
  • விஜய் நடவடிக்கை (1999)
  • புலி மலைச் சண்டை (Battle of Tiger Hill)
விருதுகள் பரம் வீர் சக்கரம்
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் யோகேந்திர சிங் யாதவின் மார்பளவுச் சிற்பம்

சுபேதார் மேஜர்[2] யோகேந்திர சிங் யாதவ் (Yogendra Singh Yadav) (பரம வீர் சக்கர விருதாளர்) 1999-இல் நடைபெற்ற கார்கில் போரின் போது, புலி மலையை (Tiger Hill) கைப்பற்றுவதற்கு, பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான இவரது வீர தீரச் செயல்களை பாரட்டும் விதமாக இந்திய இராணுவத்தின் மிக உயரிய பரம வீர் சக்கர விருது இவருக்கு 1999-இல் வழங்கப்பட்டது.[3][4]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

யோகேந்தி சிங் யாதவ் 1980ஆம் ஆண்டு மே 10 நாள் உத்திர பிரதேச மாநிலத்தின் புலந்த்சார் மாவட்டத்தில் உள்ள அவுரங்காபாத்தில் பிறந்தார்.[3][5] இவரது தந்தை, கரன் சிங் யாதவ் குமன் ராணுவப் படைத்தளத்தில் பணியாற்றியவர். இவர் 1965 மற்றும் 1971ல் நடைபெற்ற இந்தியப் பாகிஸ்தான் போரில் பங்கேற்றுள்ளார்.[3] யாதவ் தனது 16 வருட 5 மாத அகவையில் இராணுவ பணியில் சேர்ந்தார்.[6]

பரம் வீர் சக்கர விருது பெற்ற யோகேந்திர சிங் யாதவ், இந்திய நுழைவாயிலில் நடைபெற்ற கார்கில் வெற்றி விழாவில், 2018

பணி

[தொகு]

கார்கில் போர்

[தொகு]

யாதவ் 18 கிரெனேடியர்களுடன் கேக்டாக் கமாண்டோ படைப்பிரிவின் ஓர் பகுதியாக இருந்தார். இவர்கள் பணியாக ஜூலை 4, 1999 அதிகாலையில் புலி மலையில் இருந்த மூன்று முக்கிய பதுங்கு குழிகளைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டார். பதுங்கு குழிகள் செங்குத்தான பனி மலையின் உச்சியில் அமைந்திருந்தன. 1,000 அடி (300 மீ) குன்றின் மீதமைந்த பதுங்குழி தாக்குதலுக்கு யாதவ் தானாக முன்வந்து தலைமை தாங்கினார். குன்றின் மே ஏறி, கயிறுகளை கட்டிவைத்தார். இது தாக்குதலின் தீவீரத்தினை அதிகரிக்க வழிவகுத்தது. இவர்களின் முன்னேற்றத்தில் பாதியிலேயே, இயந்திர துப்பாக்கி மற்றும் ராக்கெட் தாக்குதல் எதிரிகளின் பதுங்கு குழியிலிருந்து பாய்ந்து வர, படைப்பிரிவு தளபதி உள்ளிட்ட மூவரைக் கொன்றது. இவரது இடுப்பு மற்றும் தோள்பட்டையில் பல தோட்டாக்களால் தாக்கின. இருந்த போதிலும், யாதவ் மீதமுள்ள 60 அடி (18 மீ) உயரத்திற்கு ஏறி மேலே சென்றார். பலத்த காயம் அடைந்த போதிலும், அவர் முதல் பதுங்கு குழிக்கு நோக்கி ஊர்ந்து சென்று கையெறி குண்டினை வீசினார். இதில் நான்கு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் மூலம் எதிரிகளின் தாக்குதலைச் சமளித்து மீதமுள்ள படைப்பிரிவினர் குன்றின் முகத்தின் மீது ஏறி முன்னேர வாய்ப்கா அமைந்தது[7]

யாதவ் மேலும் பாகிஸ்தானின் இரண்டு பதுங்குகுழிகளை அழிக்கும் பணியின் தன்னுடன் பணிபுரியும் வீரர்களுடன் செயல்பட்டார். இப்போரில் நான்கு பாகிஸ்தான் போர்வீரர்களைக் கொன்று புலி மலையினைக் கைப்பற்றினர், இப்போரின்போது முக்கியப்பங்கு வகித்த யாதவ் மீது எதிரிகள் சுட்டதில் 21 குண்டுகள் துளைத்தது.[8]

பரம் வீர் சக்ரா மரணத்திற்குப் பின் வழங்கும் விருதாக யாதவிற்காக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் ஒரு மருத்துவமனையில் குணமடைந்து வருவது விருது அறிவிக்கப்பட்டவுடன் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வீரமரணமடைந்தவர் பட்டியலில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.[9]

பரம் வீர் சக்கர விருது மேற்கோள்

[தொகு]

இந்திய இராணுவத்தின் வலைத்தளத்தில் பரம் வீர் சக்ரா மேற்கோளில், யாதவ் "மிகவும் அசாத்திய தைரியமான, பெரும் துணிச்சல் கொண்ட, மனச்சோர்வின்றி, இக்கட்ட சூழ்நிலைகளில் உறுதியுடையவர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[10]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Grenadier Yogendra Singh Yadav, PVC". twdi.in. Archived from the original on 27 March 2019. Retrieved 29 August 2014.
  2. "Yogendra Singh Yadav is shown to be a Subedar Major". 2017.
  3. 3.0 3.1 3.2 Major General Ian Cardozo (2003). Param Vir: Our Heroes in Battle. Roli Books Private Limited. pp. The Last Ghatak. ISBN 9789351940296.
  4. "YOGENDER SINGH YADAV | Gallantry Awards". gallantryawards.gov.in. Archived from the original on 16 December 2017. Retrieved 15 December 2017.
  5. S. D. S. Yadava (1 January 2006). Followers of Krishna: Yadavas of India (Google eBook). Lancer Publishers. p. 47. ISBN 9788170622161.
  6. Cardozo, Major General Ian (2003). Param Vir: Our Heroes in Battle. Roli Books Private Limited. p. The Last Ghatak. ISBN 9789351940296.
  7. "Profile on Yadav on the Indian Army website". Archived from the original on 13 August 2006. Retrieved 18 August 2006.
  8. Rachana Bhatt (2006). The Brave: Param Vir Chakra Stories. Penguin Books. pp. YSY. ISBN 9789351188056. {{cite book}}: |work= ignored (help)
  9. "Army orders inquiry into PVC blunder". Rediff.com. 17 August 1999. Archived from the original on 3 December 2013. Retrieved 30 November 2013.
  10. The Param Vir Chakra Winners (PVC), Official Website of the Indian Army, archived from the original on 12 January 2015, retrieved 28 August 2014 "Profile" and "Citation" tabs.

வெளி இணைப்புகள்

[தொகு]