யோஹன் பீட்டர் ரோட்லர்[1] (Johan Peter Rottler, சூன் 1749 – 24 சனவரி 1836) என்பவர் ஒரு டச்சு மறைப்பணியாளரும், தாவரவியலாளரும் ஆவார். இவர் தென்னிந்தியாவின் தரங்கம்பாடியுடனும் பின்னர் சென்னை வேப்பேரி டேனிய மிஷனுடன் மிகவும் தொடர்புடையவராக இருந்தார்.
இவர் 1749 இல் பிரான்சின் ஸ்திராஸ்பூர்க்கில் பிறந்தார். ஒன்பது வயதிலிருந்தே உள்ளூர் ஜிம்னாசியத்தில் பயின்றார். இவர் பள்ளியின் மாஸ்டர் டாக்டர் லோரென்சின் தாக்கத்துக்கு உள்ளானார். 1766 இல் இவர் ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஒன்பது ஆண்டுகள் படித்தார். மேலும் 1776 இல் ஹாலியின் டாக்டர் ஃப்ரேலிங்ஹவுசனின் பரிந்துரையின் பேரில் தென்னிந்தியாவிற்கு மறைப்பணியாளராகச் சென்றார். இவரது முதல் நியமனம் தரங்கம்பாடியில் உள்ள டேனிஸ் லூதரனிய மறைப்பணியாளராக பணியாற்றினார். 1806 இல், இவர் மதராசின் வேப்பேரிக்கு மாற்றலாகி வந்தார். அங்கு இவர் 1836 இல் இறந்தார்.
ஜோஹன் கெர்ஹார்ட் கோனிக் உட்பட இப்பகுதியில் முன்பு செயல்பட்ட இயற்கை ஆர்வலர்களின் பணிகளின் தொடச்சியாக, ரோட்லர் உற்சாகமிக்க ஒரு தாவரவியலாளராக ஆனார். இவர் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தரங்கம்பாடியிலிருந்து மதராசுக்கு பயணம் மேற்கொண்டு, பின்னர் தரங்கம்பாடிக்கே மீண்டும் பயணித்துள்ளார். தான் சென்ற வழியெங்கும் தாவர மாதிரிகளை சேகரித்து அவற்றைப் பற்றிய குறிப்பை எழுதியுள்ளார். இவ்வாறு இவர் தென்னிந்தியாவில் இருந்து 2000 இக்கும் மேற்பட்ட தாவர மாதிரிகளை உலர் தொகுப்பாக சேகரித்து ஆய்வுக்காக ஐரோப்பாவிற்கு அனுப்பினார். தமிழில் புலமைப் பெற்ற ராட்லர் தமிழை ஆய்வு செய்து தமிழ்-ஆங்கில அகராதியைத் (மூன்று தொகுதிகள்) தொகுத்தார். இவர் 1779 இல் ஒரு டச்சு கப்பல் கேப்டனின் விதவை மனைவியை மணந்தார். அவர் 1827 இல் புற்றுநோயால் வேப்பேரியில் இறந்தார். அவர் எர்லாங்கன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஷ்ரெபருடன் கடிதங்கள் வாயிலாக தொடர்பில் இருந்தார், மேலும் 1795 இல் மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[2] 1795 இல் இவர் பிரடெரிக் நோர்த்தின் செயலாளரான சர் ஹியூக் கிளேகோர்ன் உடன் சென்றார். ரோட்லரின் தாவரவியல், இயற்கை வரலாற்று அறிவை கிளேகோர்ன் பயன்படுத்திக்கொண்டார். லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பெரிய உலர் தாவரத் தொகுப்பகத்துக்கு தாவர மாதிரிகளின் தொகுப்பு அனுப்பப்பட்டது.[2] 1873 ஆம் ஆண்டில், இந்தச் சேகரிப்பு லண்டனின் அரச கழக தாவரவியல் பூங்காவுக்கு மாற்றபட்டது. 1803 ஆம் ஆண்டில், ஃபோர்ட் வில்லியம் கல்லூரியில் தமிழ் கற்பிக்கச் சென்ற பெசோல்டுக்குப் பதிலாக வேப்பேரி பணிக்கு ரோட்லர் பொறுப்பேற்றார்.[2]
இவரது கண்டுபிடிப்புகள் 1803 இல் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டன. ஆனால் அவை பல ஆண்டுகள் பெரும்பாலும் கவனிக்கப்படவில்லை.[3][4][5]
ரோட்லரின் பெரும்பாலான தாவரவியல் சேகரிப்புகள் முனிச்சின் அரச உலர் தாவரத் தொகுப்பகத்தில் உள்ளன. இவர் சேகரித்து அனுப்பிய பல தாவரங்கள் கார்ல் லுட்விக் வில்டெனோ, மார்ட்டின் வால் மற்றும் பிறரால் விவரிக்கப்பட்டுள்ளன. ரோட்லேரா பேரினத்துக்கு வால்லால் இவரது பெயர் இடப்பட்டது, ஆனால் இப்போது அது மல்லோட்டஸின் ஒத்த பொருளாக உள்ளது. வேப்பேரி தேவாலயத்தில் ரோட்லரின் நினைவு பட்டையத் தகடு உள்ளது.[2]
{{cite magazine}}
: Cite magazine requires |magazine=
(help)