ரகுநாத் கிருஷ்ணா பட்கே | |
---|---|
![]() | |
பிறப்பு | 27 ஜனவரி 1884 |
இறப்பு | 17 மே 1972 |
தேசியம் | ![]() |
அறியப்படுவது | சிற்பி |
விருதுகள் | பத்மசிறீ (1961) |
ரகுநாத் கிருஷ்ணா பட்கே (Raghunath Krishna Phadke; 1884-1972) இந்திய சிற்பி ஆவார்.[1] தனது வாழ்நாளின் பெரும்பகுதியை பம்பாய் மாகாணத்தின் தார் பகுதியில் கழித்தார். இந்திய அரசு 1961 ஆம் ஆண்டு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.[2]
பட்கே பசீனில் பிறந்தார். அங்கு தனது ஆரம்ப பள்ளிப் படிப்பை பசீன் ஆங்கிலப் பள்ளியில் பயின்றார். [3] 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், தார் மகாராஜா கலையின் புரவலராக இருந்தார். மேலும் பல கலைஞர்களை தனது இராச்சியத்திற்கு அடிக்கடி அழைப்பார். பட்கே அவர்களில் ஒருவர். அவரது வேண்டுகோளின் பேரில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தார் நகரத்தில் பட்கே ஒரு கலையரங்கத்தைத் தொடங்கினார். [4] பின்னர், 1933 இல் தாரில் குடியேறினார் [5] இது இன்று பட்கே கலையரங்கம் [6] என்று அழைக்கப்படுகிறது. இது தார் கோட்டையின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. [7]
இன்று இந்த அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, பால கங்காதர திலகர், இராசாராம் மோகன் ராய் போன்ற இந்திய வரலாற்றின் பல முக்கிய நபர்களின் சிற்பங்கள் உள்ளன. அரசர்கள், ராணிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் ஆன்மீகத் தலைவர்களின் மார்பளவு சிலைகளும் உள்ளன. [4] அரங்கத்தில் அனைத்து மார்பளவுகளும் ஒரு கல்வி பாணியில் வரிசையாக வரிசையாக உள்ளன. [5]
தார், இந்தூர் மற்றும் உஜ்ஜைனியில் உள்ள பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள மார்பளவு சிலைகளில் பட்கேவின் சொந்த கலை பாரம்பரியத்தை காணலாம். [5]
1939 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி பட்கேயின் வழிகாட்டுதலின் கீழ் அரசு நுண்கலை நிறுவனம் நிறுவப்பட்டது. இது சர் ஜே ஜே கலைப்பள்ளி, மும்பை மற்றும் இந்திரா கலா சங்கீத் விஸ்வவித்யாலயா, கைராகர், ராஜ்நந்தகாவுன், சத்தீசுகர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. 2002 முதல், இந்த நிறுவனம் மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் உயர்கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.