ரகுப்பிரியா

ரகுப்பிரியா கருநாடக இசையின் 42வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 42வது இராகத்திற்கு ரவிகிரியா என்ற பெயர்.

இலக்கணம்

[தொகு]
ரகுப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி112 ப த3 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி33 ப ம21 ரி1
  • ரிஷி என்றழைக்கப்படும் 7வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 வது மேளம்.
  • இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.
  • இது ஒரு விவாதி மேளம்.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமாக மாற்றினால் இராகம் தானரூபி (06) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

உருப்படிகள்

[தொகு]
வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி ஹிமகிரி குமாரி முத்துசுவாமி தீட்சிதர் ஆதி
கிருதி சதானந்த கோடீஸ்வர ஐயர் ரூபகம்