ரக்கிபுல் ஹுசைன் (Rakibul Hussain - பிறப்பு 7 ஆகஸ்ட் 1964) ஒரு இந்திய அரசியல்வாதி. அவர் அசாம் மாநிலத்தின் துப்ரி மக்களவைத் தொகுதியில் 2024 ஆம் அன்று நடைப்பெற்ற தேர்தலில் 10 இலட்சத்திர்க்கும் அதிகமான வோட்டு வித்தியாசத்தில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகி இருக்கின்றார்.[1]
ஹுசைன் நூருல் ஹுசைனுக்கு மகனாக 1964 ஆகஸ்ட் 7 அன்று பிறந்தார்.
ஹுசைன் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் எம்ஏ அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.[2]
2001 ஆம் ஆன்டு முதல் 2024 வரை சாமகுரி சட்டமன்றத் தொகுதியில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக போட்டியிட்டு ஐந்து முறையும் வென்று சட்டமன்ற உறுப்பினரானவர்.
2002 முதல் 2006 வரை தருண் கோகய் அரசாங்கத்தில் உள்துறை (சிறை மற்றும் ஊர்க்காவல் படையினர்), எல்லைப் பகுதி மேம்பாடு, பாஸ்போர்ட் ஆகிய துறைகளின் அமைச்சராக பணியாற்றினார்.
2004 முதல் 2006 வரை தருண் கோகய் அரசாங்கத்தில் மாநில, உள்துறை, அரசியல், பாஸ்போர்ட், ஹஜ், தகவல் தொழில்நுட்பம், அச்சிடுதல் மற்றும் எழுதுபொருள் ஆகிய துறைகளின் அமைச்சராக பணியாற்றினார்.
அவர் தருண் கோகய் அமைச்சகத்தில் 2011 முதல் 2016 வரை வனம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சராக பணியாற்றினார். [3][4][5][6][7][8]
அசாம் ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தவர் ஹுசைன். 2015 இல், அவர் அகில இந்திய கேரம் கூட்டமைப்பின் தலைவரானார்.[9]
2021-2024 வரை அசாம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தார்.
2024 இந்திய மக்களவைத் தேர்தலில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளரான பத்ருத்தீன் அஜ்மலலை அவர் 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[10]