![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | குச்சக்காப்பாளர் Coach of the Afghan national cricket team | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPN கிரிக்இன்ஃபோ, டிசம்பர் 28 2005 |
ரசீட் லதீப் (Rashid Latif, பிறப்பு: அக்டோபர் 14. 1968), ஒரு முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 37 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 166 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1992இலிருந்து 2003வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 2003 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார்.[1]
1992 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . ஆகஸ்டு 6 , இல் இலண்டனில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஐந்தாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 87 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்து மல்லாந்தரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 10 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2]
2003 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . செப்டம்பர் 3 , இல் முல்தானில் நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 14 பந்துகளில் 5 ஓட்டங்களை எடுத்து தபாசின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 39 பந்துகளில் 5 ஓட்டங்களை எடுத்து கலீத்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 1இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[3]
1992 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்ப்பயணம் செய்து விளையாடியது. ஆகஸ்டு 20 , நாட்டின்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.இந்தப் போட்டியில் 59 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்தார். இதில் இங்கிலாந்து அணி 198 ஓட்டங்கள் எடுத்தார்.[4]
2003 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்ப்பயணம் செய்து விளையாடியது. அக்டோபர் 12 , ராவல்பிண்டியில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார்.இந்தப் போட்டியில் 44 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார். இதில் தென்னாப்பிரிக்க அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இவர் 1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இவரின் அறிமுகத் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஐமது ஓட்டங்கள் அடித்ததன் மூலம் இவர் ஒருநாள் போட்டிகளுக்குத் தேர்வானார். இவர் பெரும்பானமையாக முயீன் கானுடன் ஒப்பிடப்பட்டார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருவரும் ஒரே சராசரியை வைத்திருந்தனர். ஆனால் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் மொயின் அதிக சராசரியை வைத்திருந்தார். ஒரு தேர்வுப் போட்டிகளில் மொயின் 2.14 இலக்கினையும் லதீப் 3.51 இலக்குகளையும் பெற்றிருந்தார். 1996 ஆம் ஆண்டில் சில வீரர்களுடனும் மற்றும் நிர்வாகத்திடம் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின் 1998ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணியின் தலைவராக அறிவித்தார்.