ரண்டிடங்கழி | |
---|---|
இயக்கம் | ப. சுப்ரமணியம் |
தயாரிப்பு | ப. சுப்ரமணியம் |
கதை | தகழி சிவசங்கரப் பிள்ளை |
மூலக்கதை | ரண்டிடங்கழி படைத்தவர் தகழி சிவசங்கரப் பிள்ளை |
இசை | பிஆர். லட்சுமணன் (பாடல்கள்) திருநயினர்குரிச்சி (வரிகள்) |
நடிப்பு | மிஸ் குமாரி பி. ஜே. ஆண்டனி டி. எஸ். முத்தய்யா திகுகுறிசி சுகுமாரன் நாயர் கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர் |
ஒளிப்பதிவு | என். எஸ். மணி |
படத்தொகுப்பு | கே. டி. ஜார்ஜ் |
கலையகம் | நீலா புரோடக்சன்ஸ் |
வெளியீடு | 24 ஆகத்து 1958 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
ரண்டிடங்கழி ( மலையாளம்: രണ്ടിടങ്ങഴി , பொருள் : இரண்டுபடி ) என்பது 1958 ஆண்டைய மலையாள அரசியல் திரைப்படம் ஆகும். இந்தப்படத்தின் கதைக்கு அடிப்படையாக தகழி சிவசங்கரப் பிள்ளை இதே பெயரில் எழுதிய புதினத்தை கொண்டு எடுக்கபட்டது. இப்படத்ததை ப. சுப்ரமணியம் இயக்கினார். படத்தில் மிஸ் குமாரி, பி. ஜே. ஆண்டனி, டி. எஸ். முத்தய்யா, திகுகுறிசி சுகுமாரன் நாயர், கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர், எஸ். பி. பிள்ளை, பகதூர், அடூர் பங்கஜம், சோமன், ஜே. ஏ. ஆர். ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படம் தேசிய திரைப்பட விருதுகளில் தகுதிச் சான்றிதழைப் பெற்றது.
இந்தப்படம் குட்டநாட்டின் வர்க்க பேதத்தை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. பொறுப்பான பெண்ணானும், வேலைகள் செய்வதில் திறமையான பெண்ணான சிருதாவை மணக்க பலர் விரும்புகின்றனர். நாயகன் கொரன் அந்த ஊர் நிலக்கிழாரிடம் பணம் வாங்கி செலவழித்து சிருதாவை மணக்கிறான். திருமணம் முடித்தபிறகு தம்பதியர் இருவரும் நிலக்கிழாரிடம் பண்ணை வேலைக்கு செல்கின்றனர். கொஞ்சகாலத்தில் கொரன் தொழிலாளர்களை திரட்டி நிலக்கிழாருக்கு எதிராக போராடுகிறான். இதனால் ஆத்திரமுற்ற நிலக்கிழார் கொரன்மீது திருட்டு குற்றம் சுமத்துகிறார். இதனால் இவர்களது வாழ்க்கை சிதைவுக்கு உள்ளாகிறது. இதிலிருந்து இவர்கள் மீண்டார்களா என்பதேகதை.