ரமா | |
---|---|
பிறப்பு | புதுக்கோட்டை |
மற்ற பெயர்கள் | சாந்தி |
பணி | நடிகை |
ரமா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.[1][2]
ரமா தமிழ்நாடு அணியின் விளையாட்டு வீராங்கனையாக இயக்குநர் பாரதிராஜாவின் என் உயிர்த் தோழன் (1990) படத்தில் நடித்துள்ளார். தொடர் தோல்வியின் காரணமாக திரைப்படத்துறையில் இருந்து விலகியிருந்தார்.[1]
பின் 2010 ஆம் ஆண்டு தன் இரண்டாம் அத்தியாயத்தை அவள் பெயர் தமிழரசி திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். மெட்ராஸ் (2014) திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார். இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய கத்தி (2014) திரைப்படத்தில் நடிகர் விஜயின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு அரசியல் சார்ந்த தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளார்.[2]