ரவி கே. சந்திரன் | |
---|---|
பிறப்பு | மதுராந்தகம், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | ஒளிப்பதிவாளர், திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1992— தற்போது வரை |
பட்டம் | ISC |
வலைத்தளம் | |
http://www.ravikchandran.com |
ரவி கே. சந்திரன் ஓர் இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளரும், திரைப்பட இயக்குனரும் ஆவார்.[1] இவர், பிரியதர்சன், மணிரத்னம், ராஜீவ் மேனன், சஞ்சய் லீலா பன்சாலி, ஏ. ஆர். முருகதாஸ் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி இயக்குனர்கள் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். சிறந்த ஒளிப்பதிவுக்காக, இரண்டு முறை பிலிம்பேர் விருதையும், ஒருமுறை தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். ஜீவா, துளசி நாயர் நடித்த யான் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.
ரவி கே. சந்திரன், தமிழ்த் திரைப்படத்துறையின் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ராமச்சந்திர பாபுவின் இளைய சகோதரர் ஆவார்.[2] ஹேமலதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது தனது இரு மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார்.
திரைப்படம் | ஆண்டு | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
யான் | 2014 | தமிழ் | ஜீவா, துளசி நாயர் நடித்த திரைப்படம் |
திரைப்படம் | ஆண்டு | இயக்குநர் | குறிப்புகள் |
---|---|---|---|
ஆனஸ்ட் ராஜ் | 1994 | கே. எசு. ரவி | |
மின்சார கனவு | 1997 | ராஜிவ் மேனன் | |
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | 2000 | ராஜிவ் மேனன் | |
சிட்டிசன் | 2000 | சரவண சுப்பையா | |
கன்னத்தில் முத்தமிட்டால் | 2002 | மணிரத்னம் | சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது சிறந்த ஒளிப்பதிவாளருக்கான பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருது |
பாய்ஸ் | 2003 | சங்கர் | |
ஆய்த எழுத்து | 2004 | மணிரத்னம் | |
ஏழாம் அறிவு | 2011 | ஏ. ஆர். முருகதாஸ் |
பெற்ற விருது | ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
சிறந்த ஒளிப்பதிவாளர் | 1998 | விராசாத் | இந்தி | |
சிறந்த தென்னிந்திய ஒளிப்பதிவாளர் | 2002 | கன்னத்தில் முத்தமிட்டால் | தமிழ் | |
சிறந்த ஒளிப்பதிவாளர் | 2006 | பிளாக் | இந்தி |