ரவீந்திர பரிஷத் (Rabindra Parishad) என்பது இந்தியாவின் பாட்னாவில் பீர் சந்த் படேல் பாதையில் உள்ள ஒரு பல்நோக்கு பண்பாட்டு மையமாகும். [1]
குருதேவ் தாகூரின் சிந்தனை, தத்துவம் மற்றும் கருத்துக்களை பரப்புவதற்காக ஒரு கலாச்சார நிறுவனத்தை நிறுவ 1947 இல் பாட்னாவின் ஒரு சில அறிஞர்களால் உணரப்பட்டு அதற்கான கருதுகோள் முன்வைக்கப்பட்டது. ரவீந்திர சங்கீத் மற்றும் மணிப்பூரி நடனம் ஆகியவற்றை சிறப்பாக வழங்க வேண்டும் என்பது முக்கியமான எண்ணமாக இருந்தது. இதுவே ரவீந்திர பரிஷத்தை நிறுவ இது வழிவகுத்தது. இது பாட்னாவில் உள்ள ஒரு முக்கியமான நாடக அரங்காகும். அங்கு பல்வேறு கலாச்சார மற்றும் நாடக நடவடிக்கைகள் வழக்கமான இடைவெளியில் நடைபெறுகின்றன. குரு ரவீந்திரநாத் தாகூரின் கருத்துக்கள், இலக்கியம், பாடல்கள் மற்றும் பிற படைப்புகளை சாமானியர்களுக்கு குறிப்பாக புதிய தலைமுறையினருக்கு பரப்பும் நோக்கில் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. [2]
ரவீந்திரநாத் தாகூரின் பெயரைக் கொண்டு அமைந்துள்ள இந்த பரிஷத் 1948 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. [3] இந்த கட்டிடத்தில் ஒரு இசைப்பள்ளி உள்ளது. அந்த இசைப்பள்ளி, கீத் பவன் என அழைக்கப்படுகிறது. [4] தாகூர் எழுதிய நூல்களும் அவரைப் பற்றிய நூல்களையும் கொண்ட ஒரு நூலகம் இங்கு உள்ளது. [5] மேலும் ரவீந்திர பவன் என்று அழைக்கப்படும் ஒரு அரங்கம் இங்கு உள்ளது. இந்த நாடக அரங்கமானது பாட்னாவில் ஒரு முக்கியமான அரங்கமாகும்.இங்கு பண்பாட்டு மற்றும் நாடக நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. [6] நாடக நிகழ்வுகளில் நேரடி இசை, நகைச்சுவை, நடனம், காட்சி கலை, மற்றும் குழந்தைகள் நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடத்தப்பட்ட வருகின்றன.
1957 ஆம் ஆண்டில், குருதேவ் தாகூரின் மருமகள் ரோமா சக்ரவர்த்தியின் வேண்டுகோள்படி ரவீந்திர பரிஷத்தின் இசைப் பிரிவிற்கு கீதா பவன் என்று பெயர் சூட்டப்பட்டது. ரவீந்திர பவனின் கட்டுமானம் 1955 இல் தொடங்கியது. போதிய நிதி இல்லாததால் அதன் ஒரு பகுதியை முடிக்க பல ஆண்டுகள் தாமதம் ஆனது. 1958 ஆம் ஆண்டில் மாநில அரசு இதற்காக அதிக நிலங்களை வழங்கியது. 1981 ஆம் ஆண்டில் கீதா பவன் கட்டுவதற்கு மத்திய அரசும், பீகார் அரசும் மானியங்களை வழங்கின. அப்போதைய பீகார் முதல்வர் டாக்டர் ஜகந்நாத் மிஸ்ரா அந்தக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். 1989 ஆம் ஆண்டுவாக்கில், முன்மொழியப்பட்ட மூன்று மாடி கட்டிடத்தின் தரை தளம் தயாரானது. அதற்கான துவக்க விழாவை அப்போதைய பீகார் ஆளுநராக இருந்த ஸ்ரீ ஜெகந்நாத் பஹாடியா முன்னிலையில் 16 மே 1989 ஆம் நாளன்று நடத்தப்பட்டது. [2]
2008 முதல் 2010 வரை, தியேட்டர் ஒரு பெரிய புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்த சீரமைப்பு செலவு ரூ.1.5 கோடி என மதிப்பிடப்பட்டது. 2009 ஆம் ஆண்டில், இந்நிறுவனத்திற்கு மாநில அரசு சிறப்பு நிதியை ஒதுக்கியது. அதனைக் கொண்டு 80% கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய ஆடிட்டோரியம் கட்டப்பட்டது. ஆடிட்டோரியத்தின் 1000 பேர் அமர்கின்ற வசதி உள்ளது. இது முழுமையாக குளிரூட்டப்பட்ட மற்றும் மேடை அகலப்படுத்தப்பட்டுள்ளது.[2] புதுப்பித்தலுக்குப் பிறகு, ஆடிட்டோரியத்தின் இருக்கை திறன் 655 [5] இலிருந்து 1,000 ஆக உயர்த்தப்பட்டது, மேலும் தியேட்டரின் கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டது. பிப்ரவரி 2011 இல், அதிநவீன ஆடிட்டோரியத்தை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் திறந்து வைத்தார். [3]
ரவீந்திர பரிஷத் தன்னுடைய 65 ஆண்டுகளை நிறைவு செய்து, பாரம்பரியத்தை கடைப்பிடித்து, பலவிதமான பண்பாட்டு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பல பண்பாட்டு நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. [2]