ரவீந்திரன் | |
---|---|
இயற்பெயர் | மாதவன் ரவீந்திரன் മാധവൻ രവീന്ദ്രൻ |
பிற பெயர்கள் | ரவீந்திரன் மாஸ்டர், குளத்துப்புழா ரவி |
பிறப்பு | குளத்துப்புழை, திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியா | 9 நவம்பர் 1943
பிறப்பிடம் | குளத்துப்புழை, கொல்லம், கேரளா |
இறப்பு | 3 மார்ச்சு 2005 சென்னை, தமிழ்நாடு | (அகவை 61)
இசை வடிவங்கள் | கருநாடக இசை, இந்துஸ்தானி இசை, மலையாளப் பட இசை அமைப்பு. |
தொழில்(கள்) | திரைப்பட இசையமைப்பாளர், இசை இயக்குநர், பாடகர், பின்னணி இசையமப்பாளர் |
இசைக்கருவி(கள்) | ஆர்மோனியம், வாய்ப்பாட்டு |
இசைத்துறையில் | 1979–2005 |
இணையதளம் | http://www.raveendranmaster.com |
ரவீந்திரன் (Raveendran) என்று அழைக்கப்படும் மாதவன் ரவீந்திரன் தென்னிந்திய இசையமைப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார். "ரவீந்திரன் மாஸ்டர்" என்றும் அழைக்கப்படும் இவர், மலையாளத்தின் பிரபுத்துவ இசை இயக்குநராக குறிப்பிடப்பட்டார். இவர் தனது இசையமைப்பில், ஒரு தனித்துவமான பாணியைக் கொண்டிருந்தார். மலையாள மற்றும் தமிழ் திரைப்படத் துறையில், 150 க்கும் மேற்பட்ட படங்களில் இசை அமைத்துள்ளார்.[1] இவர் வசந்த கீதங்கள் பொன்னனோத்தரங்கிணி மற்றும் ரிதுகீதங்கள் உள்ளிட்ட சில இசைத் தொகுப்புகளை உருவாக்கியுள்ளார். ஹிந்துஸ்தானி ராகத்தை அடிப்படையாகக் கொண்டு ரவீந்திரன் வெற்றிகரமாக மெல்லிசை பாடல்களுக்கு இசையமைத்தார்.
ரவீந்திரன் நவம்பர் 9, 1943இல், தற்போதைய கொல்லம் மாவட்டத்தில் உள்ள குளத்துப்புழை என்ற ஒரு சிற்றூரில் மாதவன் மற்றும் லட்சுமி (ஒன்பது குழந்தைகளில்) தம்பதியருக்கு ஏழாவது குழந்தையாகப் பிறந்தார்.[2] அவருடைய ஆரம்பகால வாழ்க்கை வறுமையில் நிறைந்திருந்தது. அதனால் பள்ளிக் கல்வியினை முடிக்க கடினமாக முயன்றார். பள்ளி நாட்களுக்குப் பிறகு அவர் திருவனந்தபுரத்தில் உள்ள சுவாதி திருநாள் இசைக் கல்லூரியில் சேர்ந்தார், அங்கு அவர் கே.ஜே.யேசுதாஸை சந்தித்தார். பின்னர் இருவரும் நண்பர்களாயினர். பின்னாளில், பின்னணிப் பாடகராக இருக்க விரும்பியதற்காக சென்னை சென்றார். "குளத்துப்புழா ரவி" என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
மலையாளப் படமான "வேலியழ்ச்சா"வில் "பர்வனரஜனித்தன்" என்ற பாடலைப் பாடியதன் மூலமாக பின்னணிப் பாடகராக மலையாளப் படவுலகிற்கு அறிமுகமானார். பின்னர் அவர் பல மலையாள இசையமைப்பாளர்களுடன் தொடர்புகொண்டார். அவர் இந்த நேரத்தில் திரைப்படங்களுக்கு ஒலிச்சேர்க்கை செய்தார்.
பிரபல பின்னணிப் பாடகரும், முன்னாள் வகுப்பு தோழருமான கே.ஜே.யேசுதாஸ், ரவீந்திரனின் இசை வாழ்க்கைக்கு உதவினார். அவரை பாடல்களை இயற்றி இசை அமைக்கச் செய்ததின் மூலம் அவரை இசை அமைப்பாளராக உயர்த்தினார்.
இயக்குநர் ஜே. சசிகுமார், சூலா (1979) படத்திற்காக ரவீந்திரனை இசை அமைப்பாளராக நியமித்தார். இப்படத்தில், யேசுதாஸ் பாடிய "தாரேக் மிழியித்தலில் கன்னேருமாயி" பாடல் வெற்றி பெற்றது. இதுவரை, ரவீந்திரன் பல மலையாளத் திரைப்படங்களுக்கு இசையமைத்து பல வெற்றிப் பாடல்களைத் தந்துள்ளார்.[3][4]
ரவீந்திரன் தனது 61வது வயதில் சென்னையிலுள்ள தனது வீட்டில் மாரடைப்பால் இறந்தார்.[1] (மார்ச் 3, 2005). அவர் நீண்ட காலமாக தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது கடைசி படைப்புகள் வடக்கும்னாதன் மற்றும் கலாபம் 2006 இல் இவருடைய மரணத்திற்கு பின்னர் வெளியிடப்பட்டது.