ரவுப் (P080) மலேசிய மக்களவைத் தொகுதி பகாங் | |
---|---|
Raub (P080) Federal Constituency in Pahang | |
ரவுப் மக்களவைத் தொகுதி (P080 Raub) | |
மாவட்டம் | ரவுப் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 75,064 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | ரவுப் தொகுதி |
முக்கிய நகரங்கள் | ரவுப், பத்து தாலாம், திராஸ், டோங் |
பரப்பளவு | 2,296 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | சோ இயூ ஊய் (Chow Yu Hui) |
மக்கள் தொகை | 95,909 (2020)[4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
ரவுப் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Raub; ஆங்கிலம்: Raub Federal Constituency; சீனம்: 劳勿国会议席) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், ரவுப் மாவட்டத்தில் (Raub District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P080) ஆகும்.[6]
ரவுப் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து ரவுப் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]
ரவுப் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் ரவுப். பகாங் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ரவுப் மாவட்டத்தின் கிழக்கில் சிலாங்கூர் மாநிலத்தின் உலு சிலாங்கூர் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தைச் சுற்றிலும், பகாங் மாநிலத்தின் லிப்பிஸ் மாவட்டம், ஜெராண்டுட் மாவட்டம், தெமர்லோ மாவட்டம், பெந்தோங் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளன.
இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்கள் பிரேசர் மலை மற்றும் பத்து தாலாம். தித்திவாங்சா மலைத்தொடர், மற்றும் பெனோம் மலைத்தொடர் ஆகியவற்றுக்கு இடையே இந்த மாவட்டம் அமைந்துள்ளது.
ரவுப் மாவட்டத்தில், 19-ஆம் நூற்றாண்டில், தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தைத் தோண்டி எடுப்பதற்கு 1889-ஆம் ஆண்டில் ’ரவுப் ஆஸ்திரேலிய தங்கச் சுரங்கம்’ (Raub Australian Gold Mine) தோற்றுவிக்கப் பட்டது. பேராக், சிலாங்கூர், பகாங் மாநிலங்களில் வாழ்ந்த மக்கள் பலர், ரவுப் தங்கச் சுரங்கத்தில் வேலை செய்வதற்குச் சென்றனர்.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில், தங்கம் தோண்டுவதில் ரவுப் மாவட்டம் பிரசித்தி பெற்று விளங்கியது. ரவுப் ஆஸ்திரேலிய தங்கச் சுரங்க நிறுவனம் (Raub Australian Gold Mine) எனும் நிறுவனம் 1889-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது.
ரவுப் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1958-ஆம் ஆண்டில் ரவுப் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P059 | 1959–1963 | உசேன் அசன் (Hussein Hassan) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மலேசிய மக்களவை | P059 | 1963–1964 | உசேன் அசன் (Hussein Hassan) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
2-ஆவது மக்களவை | 1964–1967 | |||
1967–1969 | அம்சா அபு சாமா (Hamzah Abu Samah) | |||
1969–1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[8][9] | |||
3-ஆவது மக்களவை | P059 | 1971–1973 | அம்சா அபு சாமா (Hamzah Abu Samah) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
1973–1974 | பாரிசான் நேசனல் (அம்னோ) | |||
4-ஆவது மக்களவை | P068 | 1974–1978 | அப்துல்லா மஜீத் (Abdullah Majid) | |
5-ஆவது மக்களவை | 1978–1982 | தான் தியோங் கோங் (Tan Tiong Hong) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) | |
6-ஆவது மக்களவை | 1982–1986 | தான் தியோங் கோங் (Tan Tiong Hong) | ||
7-ஆவது மக்களவை | P073 | 1986–1990 | தெங் காயிக் குவான் (Teng Gaik Kwan) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P076 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | நிங் யென் யென் (Ng Yen Yen) | ||
11-ஆவது மக்களவை | P080 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | ||||
13-ஆவது மக்களவை | 2013–2018 | அரிப் சப்ரி அப்துல் அசீஸ் (Ariff Sabri Abdul Aziz) |
பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | |
14-ஆவது மக்களவை | 2018–2022 | தெங்கு சுல்புரி சா ராஜா புஜி (Tengku Zulpuri Shah Raja Puji) |
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | சோ இயூ ஊய் (Chow Yu Hui) |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
பாக்காத்தான் அரப்பான் | சோ இயூ ஊய் (Chow Yu Hui) |
21,613 | 38.43% | 6.46% ▼ | |
பெரிக்காத்தான் நேசனல் | பக்ருநிசாம் இப்ராகீம் (Fakrunizam Ibrahim) |
17,256 | 30.69% | 30.69% | |
பாரிசான் நேசனல் | சோங் சின் ஊன் (Chong Sin Woon) |
16,939 | 30.12% | 7.90% ▼ | |
தாயக இயக்கம் | நோர்கைருல் அனுவார் முகமது நோர் (Norkhairul Anuar Mohamed Nor) |
427 | 0.76% | 0.76% | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 56,235 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 733 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 120 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 57,088 | 74.92% | 6.45 % ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 75,064 | ||||
பெரும்பான்மை (Majority) | 4,357 | 7.74% | 0.88% | ||
பாக்காத்தான் அரப்பான் | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[10] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)